இடுக்கி: சபரிமலையில் மகரஜோதியை தரிசி��்து விட்டுஊர் திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் பெரும் சோகத்தை சந்தித்துள்ளனர். வாகன விபத்திலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மிகப் பெரிய கூட்ட நெரிசலிலும் சிக்கி 102 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சபரிமலையில் நேற்று மகர ஜோதி தரிசனம் நடந்தது. இதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமல�� சுற்றுவட்டாரத்தில் திரண்டிருந்தனர். ஜோதி தரிசனத்தை முடித்த பின்னர் பக்தர்கள் தத்தமது ஊர்களுக்குக் கிளம்பினர்.
இன்று பொங்கல் என்பதால் பொங்கல் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாட அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.
சபரிமலையிலிருந்து பல்வேறு பாதைகள் உள்ளன. அதில் ஒன்று வண்டிப்பெரியார் வனப் பகுதி. இது மிகவும் அடர்ந்த காட்டுப் பகுதி, அபாயகரமான பள்ளங்கள் உள்ள பகுதிய��ம் கூட. இப்பகுதி வழியாக லட்சக்கணக்கானோர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது புல்மேடு என்ற இடத்தில் திடீரென பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பக்தர்கள் தாறுமாறாக ஓட ஆரம்பித்து கீழே விழுந்து நெரிசலில் சிக்கினர். இந்த விபரீத சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். இதுவரை 102 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் எனத் தெரிகிறது.
நெரிசலுக்கு என்ன காரணம்?
கூட்ட நெரிசலுக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. புல்மேடு பகுதியில் நேற்று இரவு எட்டு மணியளவில் பெருமளவிலான பக்தர்கள் வாகனங்கள் உள்ளிட்டவற்றில் போய்க் கொண்டிருந்தனர்.அப்போது ஒரு ஜீப் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த 400 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
அது விழுந்தபோது நிறைய பக்தர்கள் மீது மோதி விழுந்துள்ளது. இதைப் பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓடியபோது நெரிசல் ஏற்பட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.
அதேசமயம், இரு வாகனங்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததாக இன்னொரு தகவல் கூறுகிறது. இருப்பினும் கூட்ட நெரிசலில் சிக்கியே பலர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இடுக்கி,புல்மேடு, பீர்மேடு, தேனி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதுவரை சுரேஷ் (மைசூர்), அம்பரீஷ் (திருப்பூர்), கொரு குட்டி (கேரளா) ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெருமளவிலானோர் தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
விபத்து ���டந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். உள்ளூர் போலீஸாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்தும், உயிரிழந்தோர், காயமடைந்தோர் விவரங்கள் அறிய 04869-222049 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நிதியுதவி அறிவிப்பு
விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அதிர்ச்சி தெரிவித்துள்ளோர். உயிர��ழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Saturday, January 15, 2011
அட்வகேட் ஜெனரல் ராமன் மகள் கீதாஞ்சலியை ஜூலையில் மணக்கிறார் செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவனுக்கும் அவரது காதலி கீதாஞ்சலிக்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது.இதனை தனது பிஆர்ஓ நிகில் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
நடிகை சோனியா அகர்வாலை பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த செல்வராகவன், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.
இந்த விவாகரத்து நடந்த சில மாதங்களுக்குள் மீண்டும் செல்வராகவனுக்கு காதல் பூத்து விட்டது, கீதாஞ்சலி என்ற பெண்ணுடன். தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் இவர்.
செல்வராகவன் தற்போது தனது தம்பி தனுஷ் - ஆன்ட்ரியாவை வைத்து இயக்கிவரும் இரண்டாம் உலகம் படத்தின் உருவாக்கத்தின்போதுதான் கீதாஞ்சலியுடன் காதலில் விழுந்தாராம். இந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார் கீதாஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இன்று நான் இரு மகிழ்ச்சியான விஷயங்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மீண்டும் ஒரு மாறுதல். கீதாஞ்சலியை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறேன். ஜூனில் திருமணம் இருக்கும். திருமணத் தேதி முடிவானதும் அறிவிக்கிறேன்.
அடுத்தது, நான் இயக்கும் இரண்டாம் உலகம் படம் தொடர்பானது. இந்தப் படம் 70 சதவீதம் முடிந்துவிட்டது. விரைவில் இறுதிக்கட்டப் பணிகள் ஆரம்பமாகும்" என்று கூறியுள்ளார்.
விரைவில் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் நிச்சயதார்த்தம் எளிமையாக நடக்கவிருக்கிறது.
Thursday, January 13, 2011
ரஞ்சிதா - நித்தியின் பொய் பிரச்சாரம் விரைவில் அம்பலமாகும்! - லெனின் கருப்பன்
சென்னை: நடிகை ரஞ்சிதா - நித்யானந்தாவின் பொய்யான பிரச்சாரம் விரைவில் அம்பலமாகிவிடும் என்று தெரிவித்துள்ளார் நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின்.
நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா செக்ஸ் வீடியோ காட்சிகள், தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா கற்பழித்து விட்டதாக அவரது சீடர் லெனின் கருப்பன் போலீசில் ஆதாரங்களுடன் புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து நித்யானந்தா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் வீடியோ வெளியான 8 மாதங்கள் கழித்து தன்னை கற்பழிக்க முயன்றதாக லெனின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் ரஞ்சிதா.
மேலும் சமீபத்தில் இதுகுறித்து அளித்த பேட்டியில், ரஞ்சிதா இப்படிக் கூறியுள்ளார்:
"நான் தலைமறைவு வாழ்க்கை நடத்தவில்லை. கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதியில் விசாரணைக்காக புலனாய்வு அதிகாரிகளைச் சந்தித்தேன். அதற்குப் பிறகு அமெரிக்காவுக்குச் சென்றேன். என்னுடைய சகோதரிகளுடன் சில மாதங்கள் இருந்தேன். இப்போது பெங்களூர் வந்திருக்கிறேன்.
நான் ஒரு நடிகை என்பதற்காக, ஒவ்வொரு நாளும், 24 மணி நேரமும் என்ன செய்கிறேன், எங்கே இருக்கிறேன் என்பதை எல்லோருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நடிகையாக இருந்தாலும், நானும் ஒரு சராசரிப் பெண்தான். அந்த சம்பவத்தால் நான் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டேன். என்னைவிட என் குடும்பத்தினர் மிகவும் மனம் உடைந்து போனார்கள்.
அதிலிருந்து மீளவே எங்களுக்கு இரண்டு மூன்று மாதங்கள் தேவைப்பட்டது. என் மீது இழைக்கப் பட்ட அநீதியை எதிர்த்துப் போராட வேண்டுமென என் குடும்பத்தினர் மனரீதியாக தயாராவதற்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டது.
இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. லெனின் கருப்பனும் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். முதலில் பல பிரம்மசாரிகள் என்னிடம் வந்து புலம்பினார்கள். சாமியைப்பற்றி பலவிதமாக சொன்னார்கள். அதனால் நான்தான் திட்டமிட்டு அந்த வீடியோவை எடுத்தேன் என்றார். இப்போது சில மாதங்களுக்குப் பிறகு அதை நான் எடுக்கவில்லை. வேறொருவர் எடுத்தார். அதைத்தான் நான் வெளியிட்டேன் என்கிறார்.
இது நாள் வரை அவர் தான் கதை சொல்லிக் கொண்டிருந்தார். இனிதான் உண்மைக்கதை வெளிவரப்போகிறது. அப்போது எல்லாம் புரியும். ஆசிரமத்தில் இருந்த ஆர்த்தி ஐந்து ஆண்டுகளாக நித்யானந்தாவின் சிஷ்யை.
பிலானியில் படித்து, அமெரிக்காவில் வேலை கிடைத்ததும் அங்கேயே போய் திருமணமாகி செட்டிலானவர். இவருக்கும் லெனினுக்கும் இடையே நட்பு உருவானது. இவர்கள் இருவருமே பிரச்சினைக்குப் பின்னால் இருப்பதாக கேள்விப்பட்டதால் அதையும் என் புகாரில் குறிப்பிட்டிருக்கிறேன்.
குழந்தை இருப்பது உண்மையா?
எனக்கு குழந்தை இருப்பதாக சொல்வது முழு பொய். நான் யாருடைய கஸ்டடியிலும் இல்லை. என்னை யாரும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. என்னைக் கட்டுப்படுத்தவும் முடியாது. என்னுடைய முழுபலம் என் குடும்பம். இவர்கள் யாரும் இல்லையென்றால் இன்றைக்கு நான் இருந்திருக்கவே மாட்டேன். அதேபோல் நான் முற்றிலுமாக மனமுடைந்து இருந்த இரண்டு மாதங்களும், நித்யானந்தா வேறெங்கோ இருந்தாலும் அவர் என்னுடனேயே இருந்து ஆசிர்வதித்தது போன்று உணர்ந்தேன்.
ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்கள், தங்களது குருவை மானசீகமாக பின் பற்றுபவர்களுக்கு நான் சொல்வது என்னவென்பது புரியும். இது ஒரு வித்தியாசமான அனுபவம்...", என்றார்.
லெனின் மறுப்பு
இதற்கு லெனின் கருப்பன் மறுப்பு தெரிவித்து கூறியிருப்பதாவது:
நித்யானந்தா மீது சட்டப் படி வழக்கு தொடர்ந்துள்ளேன். இன்னும் ஒரு சில மாதங்களில் உண்மை தெரிய வரும். யார் பொய் சொல்கிறார்கள், உண்மை சொல்கிறார்கள் என்பது மக்களுக்கு அப்போது தெரியும். ரஞ்சிதா 10 மாதமாக எங்கே போனார்? இப்போது திடீரென வந்து புகார் கொடுக்கிறார். எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளதுதான் முக்கியம். இவர்கள் ஆதாரமற்று வெறுமனே பேசிக் கொண்டுள்ளனர்.
நித்யானந்தா பேச்சை கேட்டு கொண்டு ரஞ்சிதா செயல்படுகிறார். தன் மீதுள்ள வழக்கை திசை திருப்புவதற்காக நித்யானந்தா, ரஞ்சிதாவை தூண்டி விடுகிறார். ரஞ்சிதா அவர் பேச்சை கேட்டு பொய் மேல் பொய்யாக பேசுகிறார். உள்நோக்கத்துடன் என் மீது வழக்கு தொடர்ந் துள்ளார். அதை சட்டப்படி சந்திப்பேன்.
தொடர்ந்து பொய்யான வதந்திகளை ரஞ்சிதா பரப்புவதால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன். ஆர்த்தி என்னுடன் பணியாற்றியவர். தன்னைப் போலவே பிறரையும் அதே கண்ணோட்டத்தில் ரஞ்சிதா பார்க்கிறார்...", என்றார்.

ரூ 15 கோடி டெபாசிட் செய்துவிட்டு காவலனை வெளியிட உத்தரவு
விஜய் நடித்துள்ள காவலன் திரைப்படத்தை வெளியிடும் முன் ரூ 15 கோடியை பாதுகாப்புத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய்யின் காவலன் படத்துக்கு திரையரங்குகள் பிரச்சினை மட்டுமல்ல, தயாரிப்பாளர் மீதான மோசடி வழக்கு, நிதி நெருக்கடி என ஏகப்பட்ட பிரச்சினைகள். இதனால் படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடைசி வரை வருமா வராதா என்ற குழப்பம் நீடித்து வந்தது.
இன்னொரு பக்கம் இந்தப் படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம், சர்வதேச விநியோக உரிமை பெற்ற சிங்கப்பூர் பட நிறுவனமான சந்திரா எண்டர்பிரைசஸ், விநியோக உரிமை பெற்ற சினிடைம்ஸ் எண்டர் பிரைசஸ் ஆகியவை சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த படத்தை வெளியிடும் விநியோக உரிமை பெற்ற சக்தி சிதம்பரம், விநியோக உரிமையை ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு விற்றதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும் மலையாளத்தில் வெளியான 'பாடிகாட்' படத்தை விலைக்கு வாங்கிய கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம், தங்கள் அனுமதியின்றி படத்தை தயாரித்துவிட்டதாக இயக்குனர் சித்திக்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். படத்தின் தயாரிப்பாளர் ரொமேஷ்பாபு, வழக்கு தொடர்ந்தவர்கள் கோரியுள்ள தொகையான ரூ.15 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் திட்டமிட்டபடி காவலன் படத்தை தயாரிப்பாளரே வெளியிடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Wednesday, January 12, 2011
ராக்கெட் ராஜா என்ற பெயருக்கு எதிர்ப்பு -கார்த்தி வீடு முன்பு நாடார்கள் மறியல்
சிறுத்தை படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கார்த்தி வீடு முன்பு, நாடார் மக்கள்
கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் சிறுத்தை. இப்படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரில் அவர் நடித்துள்ளாராம். நாடார் மக்கள் கட்சி என்ற கட்சியின் தலைவர் பெயர் ராக்கெட் ராஜா. இதையடுத்து சிறுத்தை படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரைப் பயன்படுத்தியதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பெயரை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும், இதை வலியுறுத்தி கார்த்தி வீட்டை முற்றுகையிடப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து பாண்டி பஜாரில் உள்ள நடிகர் சிவக்குமார் வீட்டில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு
போடப்பட்டது. இருப்பினும் இன்று காலை தடையை மீறி நாடார் மக்கள் கட்சியினர் குவிந்து விட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெயரை மாற்ற மாட்டோம்-சிறுத்தை தயாரிப்பாளர்
இதற்கிடையே ராக்கெட் ராஜாஎன்ற பெயரை மாற்ற முடியாது என்று சிறுத்தை படத் தயாரிப்பாளரும், நடிகர் கார்த்தியின் உறவினருமான ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், படம் வெளிவருவதற்கு முன்பே அந்த கேரக்டர் பெயரை மாற்றக்கோருவது சரியல்ல. படம் பார்க்கும் போது உண்மை நிலை தெரியவரும். அப்போது எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்என்று கூறியுள்ளார்.
நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் சிறுத்தை. இப்படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரில் அவர் நடித்துள்ளாராம். நாடார் மக்கள் கட்சி என்ற கட்சியின் தலைவர் பெயர் ராக்கெட் ராஜா. இதையடுத்து சிறுத்தை படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரைப் பயன்படுத்தியதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பெயரை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும், இதை வலியுறுத்தி கார்த்தி வீட்டை முற்றுகையிடப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து பாண்டி பஜாரில் உள்ள நடிகர் சிவக்குமார் வீட்டில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு
பெயரை மாற்ற மாட்டோம்-சிறுத்தை தயாரிப்பாளர்
இதற்கிடையே ராக்கெட் ராஜாஎன்ற பெயரை மாற்ற முடியாது என்று சிறுத்தை படத் தயாரிப்பாளரும், நடிகர் கார்த்தியின் உறவினருமான ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், படம் வெளிவருவதற்கு முன்பே அந்த கேரக்டர் பெயரை மாற்றக்கோருவது சரியல்ல. படம் பார்க்கும் போது உண்மை நிலை தெரியவரும். அப்போது எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்என்று கூறியுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும்-அரசு
சென்னை: ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் வருவதையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை வந்து விட்டது. 14ம் தேதி போகியும், 15ம் தேதி தைப் பொங்கலும், 16ம் தேதி திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படவுள்ளது.
திருவள்ளுவர் தினத்தன்று தமிழகம்
முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அது போக பார்கள், கிளப்களில் உள்ள மது பார்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி யாரேனும் திறந்தால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வந்து விட்டது. 14ம் தேதி போகியும், 15ம் தேதி தைப் பொங்கலும், 16ம் தேதி திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படவுள்ளது.
திருவள்ளுவர் தினத்தன்று தமிழகம்
இந்த உத்தரவை மீறி யாரேனும் திறந்தால் கடும் நடவடிக்கை
ஜன. 14 முதல் பிரகாஷ் ராஜின் பயணம் பட டிரெய்லர்
ஜனவரி 14ம் தேதி பிரகாஷ் ராஜின் பயணம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. பிப்ரவரியில் படம் திரைக்கு வருகிறது.
பிரகாஷ் ராஜின் தயாரிப்பு பயணம். இதை ராதாமோகன் இயக்கியுள்ளார். விமானக் கடத்தல்
குறித்த கதை இது. படத்தில் நாகார்ஜூனா ஹீரோவாக நடித்துள்ளார். கமாண்டோ வீரராக அவர் வருகிறார். கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், ஜனவரி 14ம் தேதி டிரெய்லரை வெளியிடுகிறோம். பொங்கலுக்கு திரைக்கு வரும் படங்களுடன் எங்களது டிரெய்லர் வெளியிடப்படும். பிப்ரவரி 4ம் தேதி படம் திரைக்கு வருகிறது என்றார்.
படம் சிறப்பாக வந்திருப்பதாக டிரெய்லர் குறித்து அறிந்தவர்கள் கூறுகிறார்கள். வித்தியாசமான திரைக்கதையுடன் இப்படத்தின் கதையை அமைத்துள்ளாராம் ராதாமோகன் என்கிறார்கள்.
பிரகாஷ் ராஜின் தயாரிப்பு பயணம். இதை ராதாமோகன் இயக்கியுள்ளார். விமானக் கடத்தல்
இப்படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், ஜனவரி 14ம் தேதி டிரெய்லரை வெளியிடுகிறோம். பொங்கலுக்கு திரைக்கு வரும் படங்களுடன் எங்களது டிரெய்லர் வெளியிடப்படும். பிப்ரவரி 4ம் தேதி படம் திரைக்கு வருகிறது என்றார்.
படம் சிறப்பாக வந்திருப்பதாக டிரெய்லர் குறித்து அறிந்தவர்கள் கூறுகிறார்கள். வித்தியாசமான திரைக்கதையுடன் இப்படத்தின் கதையை அமைத்துள்ளாராம் ராதாமோகன் என்கிறார்கள்.
Tuesday, January 11, 2011
வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் நடித்த ஷோபனா தற்கொலை
சென்னை: நடிகர் வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள நகைச்சுவை நடிகை ஷோபனா நேற்று திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.அவரது இந்த தற்கொலைக்கு காதல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. திருச்சியைச் சேர்ந்தவர் ஷோபனா.
நடிகர் வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட நிறைய நடிகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகை ஷோபனா (வயது 32). திருமணமாகாத இவர், தனது தாயார் வைரம்ராணியுடன் கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் 'எச்' பிளாக்கில் வசித்து வந்தார்.
நேற்று காலை 10.30 மணிkdkg தாயார் ராணி வங்கிக்கு போய்விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஷோபனா திடீரென்று தற்கொலை முடிவை எடுத்துள்ளார். கதவை உள்பக்கம் சங்கிலியால் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு ஷோபனா உயிரை விட்டுவிட்டார்.
வங்கிக்கு போய்விட்டு திரும்பி வந்த தாயார் ராணி கதவை நீண்டநேரம் தட்டி பார்த்தார். கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். மகள் ஷோபனா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தூக்கில் இருந்து இறக்கி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஷோபனாவை எடுத்து சென்றனர். டாக்டர்கள் சோதித்து பார்த்துவிட்டு, ஷோபனா ஏற்கனவே இறந்து போய்விட்டதாக தெரிவித்தனர்.
ஷோபனா தற்கொலை மூலம் உயிரைவிட்ட சம்பவம்
ஷோபனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு ஷோபனாவின் உடலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி சடங்குகள் நடக்கிறது.
ஏன் இந்த தற்கொலை?
ஷோபனா தற்கொலை செய்து கொண்டதில் பெரும் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் வைரம் ராணி கூறுகையில், "எங்கள் குடும்பமே சினிமா குடும்பம். நானும், நாடகம் மற்றும் சினிமாவில் நடித்துள்ளேன். எனது கணவர் ஜெயராமனும் நாடக நடிகர்தான். எனது மூத்த மகள் ஆனந்தி, டைரக்டர் குருசங்கரை மணந்துகொண்டு தியாகராய நகரில் தனியாக வசிக்கிறாள். ஷோபனா எனக்கு 2-வது மகள். பி.காம். பட்டப்படிப்பு படித்திருக்கிறாள். 15 வயதிலிருந்தே அவள் நாடகங்களில் நடித்து வந்தாள்.
மீண்டும் மீண்டும் சிரிப்பு...
வெண்ணிற ஆடை மூர்த்தியோடு சினிமாவிலும், நாடகங்களிலும் நடித்திருக்கிறாள். நடிகர் வடிவேலுவுடனும் நிறைய படங்களில் ஜோடியாக நடித்துள்ளாள். 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' என்ற டி.வி. சீரியலில் வெண்ணிற ஆடைமூர்த்தியோடு நடித்து ஷோபனா பிரபலமானாள். 'ஜில்லுன்னு ஒரு காதல்', 'சுறா' உள்பட 100 படங்களில் நடித்துள்ளாள். 'இளைஞன்', `சிறுத்தை' உள்பட அவள் நடித்துள்ள இன்னும் 10 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. 'மாமா மாப்ளே' டி.வி. தொடரிலும் ஷோபனா நடித்துக் கொண்டிருந்தாள்.
காதல் ஏமாற்றம்...
ஒரு ஆள் காதலித்து திருமணம் செய்வதாக கூறிவிட்டு, ஷோபனாவை ஏமாற்றிவிட்டான். அது, அவளுடைய மனதில் ஆறாத துயரமாக இருந்தது.
நான் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஷோபனா இனிமேல் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டாள். 'சிக்குன்குனியா' நோயால் பாதிக்கப்பட்டு அவள் அண்மையில் மிகவும் கஷ்டப்பட்டாள். சினிமா, டி.வி. தொடர் படப்பிடிப்புக்கு கூட அவளால் போக முடியவில்லை. என் மகள் மிகவும் நல்லவள். சினிமாவில் நடித்தாலும்கூட அவள் எந்த தப்பும் செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள்.
அவளுடன் நடிக்கும் சக நடிகர்-நடிகைகள் மிகவும் நல்ல பெண் ஷோபனா என்று தான் பாராட்டுவார்கள். சினிமா, டி.வி. தொடரில் நடிப்பதற்காக ஷோபனாவுக்கு கிடைக்கும் பணத்தை வங்கி காசோலையாகத்தான் தருவார்கள். அதுபோல கிடைத்த ஒரு காசோலையை வங்கியில் போடுவதற்காக நான் காலை 10.30 மணியளவில் அருகில் உள்ள வங்கிக்கு போனேன். நான் போகும்போது ஷோபனாதான் எனக்கு 2 தோசை சுட்டுக்கொடுத்தாள். டீயும் போட்டுக்கொடுத்தாள். அப்போது அவளுடைய மனதில் எந்தவித சஞ்சலமோ, வருத்தமோ இருந்ததாக தெரியவில்லை.
சமையலுக்கு கீரை வாங்கி வைத்திருந்தோம். அந்த கீரையை நறுக்கி வேகவைத்துவிட்டு நான் குளிக்க போகிறேன். அதற்குள் நீங்கள் வந்துடும்மா, என்று ஷோபனா சிரித்துக்கொண்டே என்னை வங்கிக்கு அனுப்பி வைத்தாள்.
ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, என் மகள் தூக்கில் தொங்கினாள். தூக்கில் இருந்து கீழே இறக்கியபோதுகூட அவளுக்கு உயிர் இருந்தது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் அவளை பிழைக்க வைத்திருக்கலாம். தூக்கில் இருந்து இறக்கி வைத்து ஒரு மணி நேரம் கழித்துத்தான் அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். இதனால் அவளை காப்பாற்ற முடியவில்லை. அவள் இந்த தற்கொலை முடிவை எடுத்ததற்கு என்ன காரணம்? என்று எனக்கும் புரியாத புதிராக உள்ளது. கடிதம் எதுவும் அவள் எழுதி வைக்கவில்லை..."
-இவ்வாறு தாயார் ராணி கண்ணீர்விட்டு கதறி அழுதபடி தெரிவித்தார்.
போலீசார் தீவிர விசாரணை
ஷோபனா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஷோபனாவின் சோக முடிவுக்கு காதல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஷோபனாவின் வீட்டிலிருந்து ஒரு டைரியை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. அதில் ஷோபனா என்ன எழுதி வைத்திருக்கிறார் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஷோபனாவின் தாயார் சமீப காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். அம்மாவும் போய்விட்டால் தனது எதிர்காலம் பற்றிய கவலையில் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஷோபனாவின் திடீர் தற்கொலை தமிழ் சினிமா வட்டாரத்திலும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் டிவியில் பொங்கல் ஸ்பெஷல்
தைப் பொங்கலை சிறப்பாக வரவேற்க அட்டகாசமான நிகழ்ச்சிகளுடன் தயாராகி விட்டது விஜய் டிவி.ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களும் அதிரடி நிகழ்ச்சிகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளது விஜய் டிவி.
ஜனவரி 15
காலை 6.30 மணிக்கு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி இடம் பெறுகிறது. 7 மணிக்கு பட்டிமன்றம் நடைபெறுகிறது. 8.30 மணிக்கு தூங்காநகரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் இடம் பெறும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். காலை 9 மணிக்கு காபி வித் அனு நிகழ்ச்சியில், நாகார்ஜுனாவும், பிரகாஷ் ராஜும் கலந்து கொண்டு உரையாடுகின்றனர்.
காலை 10 மணிக்கு வில்லா டு வில்லேஜ். சின்னத்திரையைச் சேர்ந்த புகழ் பெற்ற ஐந்து ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். கிராமம் ஒன்றில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு செமையாக கலாய்க்கிறார்கள் இவர்கள்.
காலை 11 மணிக்கு கார்த்தியுடன் ஒரு சிறுத்தைப் பொங்கல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. நடிகர் கார்த்தியின் காமெடி கலந்த மறுபக்கத்தை ரசிகர்கள்
பிற்பகல் 1 மணிக்கு நீயா நானா பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்றைய சினிமா
மாலை 3 மணிக்கு சூப்பர் ஹிட் திரைப்படம் சிக்கு புக்கு திரையிடப்படும். ஆர்யா, ஷ்ரேயா, ப்ரீத்திகா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். சந்தானம் காமெடியில் கலக்கியுள்ளார்.
மாலை 6 மணிக்கு இளைஞர்களின் இளைஞன் நிகழ்ச்சி இடம் பெறும்.
இரவு 7 மணிக்கு அது இது எது இடம் பெறுகிறது. இயக்குநர்
இரவு 8 மணிக்கு ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி இடம் பெறுகிறது. சின்னத் திரை நட்சத்திரங்கள் ஸ்ரீவித்யா, ஸ்ரீதர் குழுவினரும், மீரா கிருஷ்ணன், கிருஷ்ணன் ஜோடியும் மோதுகின்றனர்.
இரவு 9 மணிக்கு ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி.
இரவு 10 மணிக்கு காதல் மீட்டர். நடிகை தேவயானியும், அவரது கணவர் ராஜகுமாரனும் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சுரேஷ் நிகழ்ச்சியை நடத்துகிறார்.
ஜனவரி 16
காலை 9 மணிக்கு நடிகர் ஆர்யாவுடன் ஒரு உரையாடல். 11 மணிக்கு கல்யாண வைபோகம்.
பிற்பகல் 1 மணிக்கு விஜய் முகம். 3 மணிக்கு சூப்பர் ஹிட் தமிழ்த் திரைப்படம் அய்யனார் ஒளிபரப்பாகும்.
ஜனவரி 17
காலை 7 மணிக்கு சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி.
11 மணிக்கு மம்முட்டி, மீரா ஜாஸ்மின், ரம்யா கிருஷ்ணன், நரேன் நடித்துள்ள ஒரே கடல் திரைப்படம் ஒளிபரப்பாகும்.
பிற்பகல் 2 மணிக்கு இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ஆதி, நந்தா, சிந்து மேனன் நடித்த ஈரம் திரைப்படம் ஒளிபரப்பாகும்.
2010-ம் ஆண்டின் மக்கள் விரும்பிய ஆண்-ரித்திக், பெண்-கத்ரீனா
மும்பை: 2010-ம் ஆண்டின் மக்கள் அதிகம் விரும்பிய ஆணாக ரித்திக் ரோஷனும், பெண்ணாக கத்ரீனா கைபும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னணி நாளிதழ் நடத்திய கணக்கெடுப்பில் இவர்கள் இருவரும் 49 பேரை பின்னுக்குத் தள்ளி, முன்னுக்கு வந்துள்ளனர்.
ஸ்டைல் மன்னன் சல்மான் கான் 2வது இடத்தையும், இளம் நாயகன் ரன்பீர் கபூர் 3 வது இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும், ஷாஹித் கபூர் 4வது இடத்தையும், ஜான் ஆப்ரகாம் 5 வது இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களை ஷாருக் கான், அக்சய் குமார், அர்ஜுன் ராம்பல், இம்ரான் கான் மற்றும் சைப் அலி கான் பிடித்துள்ளனர்.
மிகவும் விரும்பப்படும் பெண்ணாக கத்ரீனா தேர்வாகியுள்ளார். அவர் கடந்த ஆண்டும் இந்தப் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்தை ஐஸ்வர்யா ராயும், அவரைத் தொடர்ந்து பிரியங்கா, தீபிகா படுகோனே, கரீனா கபூர் வந்துள்ளனர். சிரிப்பழகி ஜெனிலியா, சோனம் கபூர், பிபாஷா பாசு, கங்கனா ரனவ்த், மிஸ் எர்த் நிக்கோல் பாரியா ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆக, ஐஸ்வர்யா ராய் படிப்படியாக தனது செல்வாக்கை ஒவ்வொரு துறையாக இழந்து வருகிறார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

Sunday, January 9, 2011
பொங்கலுக்கு 6 படங்கள் “ரிலீஸ்” விஜய், தனுஷ், கார்த்தி படங்கள் போட்டி
பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 15-ந்தேதி ஆறு புதுப்படங்கள் ரிலீசாகின்றன.
“காவலன்”, “ஆடுகளம்”, “சிறுத்தை”, “இளைஞன்” ஆகிய பெரிய பட்ஜெட் படங்களும் “சொல்லித்தரவா”, “கறுத்த கண்ணன் ரேக்ளாரேஸ்” ஆகிய சிறு பட்ஜெட் படங்களும் பொங்கலுக்கு வருகிறது.
“காவலன்” படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்துள்ளனர். சித்திக் இயக்கியுள்ளார். மலையாளத்தில் வெளியான “பாடிகார்ட்” படத்தின் ரீமேக்கே இப்படம்.
“ஆடுகளம்” படத்தில் தனுஷ் கோழி வளர்த்து போட்டிக்கு விடும் கேரக்டரில் வருகிறார். இதனால் அவருக்கும் எதிர் கோஷ்டிக்கும் நடக்கும் சண்டை சச்சரவுகளே படத்தின் கதை. நாயகியாக டாப்சி வருகிறார். வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இவர் தனுசின் முந்தைய படமான “பொல்லாதவன்” படத்தை டைரக்டு செய்தவர்.
“சிறுத்தை” படத்தில் கார்த்தி, தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். சிவா இயக்கியுள்ளார். போலீஸ் அதிகாரி, பிக்பாக்கெட் திருடன் என இரு வேடத்தில் கார்த்திக் நடித்துள்ளார்.
“இளைஞன்” படம் கலைஞர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவாகியுள்ளது. கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரு இளைஞன் பற்றிய கதையே இப்படம்.
1811-ம் ஆண்டு கடலில் மூழ்கிய அமெரிக்க போர்க்கப்பல் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் கான்கடி கட் பகுதியை சேர்ந்தவர்கள் சார்லஸ் பப்பும், கிரயிக்கார்கர். இவர்கள் இருவரும் நீரில் மூழ்கி கடல்வாழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் “ரோத்” தீவு பகுதியில் கடலில் மூழ்கி கிடந்த ஒரு கப்பலின் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தனர். ஆனால் அதுகுறித்து அவர்கள் யாரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. அந்த கப்பல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இறுதியில் அது அமெரிக்க போர்க்கப்பல் என தெரியவந்தது.
கடந்த 1811-ம் ஆண்டு அமெரிக்காவுக்கம், இங்கிலாந்துக்கும் இடையே போர் நடந்தது. அப்போது அமெரிக்க கப்பற்படையை கமாண்டர் ஆலிவர் ஹஷார்ட் என்பவர் வழிநடத்தி சென்றார். இந்த போரில் கடந்த 1813-ம் ஆண்டு அமெரிக்கா வெற்றி பெற்றது.
அப்போது நடந்த போரின்போது கடலில் மூழ்கிய அமெரிக்க கப்பலின் ஒருபகுதிதான் இது என தெரியவந்துள்ளது. இக்கப்பல் மூழ்கி 200 வருடம் ஆகிறது. இதன் ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கப்பலின் உடைந்த பாகங்களில் 42 இஞ்ச் நீள பீரங்கிகள், ஒரு நங்கூரம் மற்றும் மெட்டல் பகுதிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஐ.பி.எல்: வீரர் பெயர், ஏலம் எடுத்த அணி, விலை-முழு விவரம்
பெங்களூர்: ஐபிஎல்
சீஸன் 4 போட்டிகளுக்கான வீரர்களை அணிகள் இன்று ஏலம் எடுத்தன. இன்றைய ஏலத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீரை அதிகபட்சமாக ரூ.11.04 கோடிக்கு நடிகர்
ஷாருக் கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) ஏலம் எடுத்துள்ளது. இதே அணி யூசுப் பதானை ரூ.9.66 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ரோஹித் சர்மாவை மும்பை
இந்தியன்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. ராபின் உத்தப்பாவை புனே சஹாரா வாரியர்ஸ் ரூ.9.66 கோடிக்கு ஏலம் எடுத்தது.
சீஸன் 4 போட்டிகளுக்கான வீரர்களை அணிகள் இன்று ஏலம் எடுத்தன. இன்றைய ஏலத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீரை அதிகபட்சமாக ரூ.11.04 கோடிக்கு நடிகர்
ஷாருக் கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) ஏலம் எடுத்துள்ளது. இதே அணி யூசுப் பதானை ரூ.9.66 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ரோஹித் சர்மாவை மும்பை
இந்தியன்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. ராபின் உத்தப்பாவை புனே சஹாரா வாரியர்ஸ் ரூ.9.66 கோடிக்கு ஏலம் எடுத்தது.| வீரரின் பெயர் | ஏலம் எடுத்த அணி | வாங்கப்பட்ட விலை |
| கெளதம் கம்பீர் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ரூ.11.04 கோடி |
| யூசுப் பதான் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ரூ.9.66 கோடி |
| ரோஹித் சர்மா | மும்பை இந்தியன்ஸ் | ரூ.9.2 கோடி |
| ராபின் உத்தப்பா | புனே சஹாரா வாரியர்ஸ் | ரூ.9.66 கோடி |
| ராகுல் திராவிட் | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.2.26 கோடி |
| ஆடம் கில்கிறிஸ்ட் | பஞ்சாப் லெவன் | ரூ.4.08 கோடி |
| ஜாக் கல்லிஸ் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ரூ.5 கோடி |
| ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் | மும்பை அணி | ரூ.3.85 கோடி |
| குமார் சங்ககரா | டெக்கான் சார்ஜர்ஸ் | ரூ.3.17 கோடி |
| யுவராஜ் சிங் | புனே வாரியர்ஸ் | ரூ.8.28 கோடி |
| மஹேல ஜெயவர்தனா | கொச்சி அணி | ரூ.6.75 கோடி |
| டிவில்லியர்ஸ் | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | ரூ.5.06 கோடி |
| ஜகீர் கான் | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | ரூ.4.14 கோடி |
| ரோஸ் டெய்லர் | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ.4.6 கோடி |
| இர்பான் பதான் | டெல்லி டேர் டெவில்ஸ் | ரூ.8.62 கோடி |
| தினேஷ் கார்த்திக் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ. 4.14 கோடி |
| டேவிட் ஹுஸ்ஸே | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ. 6.44 கோடி |
| அபிஷேக் நாயர் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ. 3.68 கோடி |
| ஸ்டவுட் ப்ரோட் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ. 1.84 கோடி |
| ராஸ் டெய்லர் | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ. 4.6 கோடி |
| ஜோகன் போத்னா | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ. 4.37 கோடி |
| விவிஎஸ் லட்சுமண் | கொச்சி அணி | ரூ. 1.84 கோடி |
| பிரண்டன் மெக்கொல்லம் | கொச்சி அணி | ரூ. 2.18 கோடி |
| ஸ்ரீசாந்த் | கொச்சி அணி | ரூ. 4.14 கோடி |
| ஆர்.பி.சி்ங் | கொச்சி அணி | ரூ. 2.3 கோடி |
| பார்தீவ் படேல் | கொச்சி அணி | ரூ. 1.33 கோடி |
| ரவீநதிர ஜடேஜா | கொச்சி அணி | ரூ. 4.37 கோடி |
| பிராட் ஹட்டின் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ரூ. 1.49 கோடி |
| ஷாகிப் அல்ஹசன் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ரூ. 1.95 கோடி |
| டேவிட் ஜேக்கப் | மும்பை இண்டியன்ஸ் | ரூ. 87.4 லட்சம் |
| டேவிட் வார்னர் | டெல்லி டேர்டெவில்ஸ் | ரூ. 3.4 கோடி |
| நமன் ஓஜா | டெல்லி டேர்டெவில்ஸ் | ரூ. 1.24 கோடி |
| ஜேம்ஸ் ஹோப்ஸ் | டெல்லி டேர்டெவில்ஸ் | ரூ. 1.16 கோடி |
| விரித்திமான் சாஹா | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ. 46 லட்சம் |
| கிராம் ஸ்மித் | சஹாரா புனே வாரியர்ஸ் | ரூ. 2.3 கோடி |
| டிம் பெய்ன் | சஹாரா புனே வாரியர்ஸ் | ரூ. 1.24 கோடி |
| தில்ஷான் திலகரத்னே | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | ரூ. 2.99 கோடி |
| டேனியல் வெட்டோரி | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | ரூ. 2.6 கோடி |
| செளரப் திவாரி | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | ரூ. 7.36 கோடி |
| கெவின் பீட்டர்சன் | டெக்கன் சார்ஜர்ஸ் | ரூ. 2.99 கோடி |
| கேமரூன் ஒயிட் | டெக்கன் சார்ஜர்ஸ் | ரூ. 5.06 கோடி |
| ஷிகார் தவான் | டெக்கன் சார்ஜர்ஸ் | ரூ. 1.38 கோடி |
| ஜே.பி.டுமினி | டெக்கன் சார்ஜர்ஸ் | ரூ. 1.38 கோடி |
| ட்வைன் பிரேவா | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ. 93 லட்சம் |
| ஸ்டீவன் ஸ்மித் | கொச்சி அணி | ரூ. 92 லட்சம் |
| ஜேம்ஸ் பிராங்க்ளின் | மும்பை இண்டியன்ஸ் | ரூ. 46 லட்சம் |
| தினேஷ் கார்த்திக் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ. 4.14 கோடி |
| பிரவீன் குமார் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ. 3.68 கோடி |
| ரையான் ஹாரிஸ் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ. 1.49 கோடி |
| பியுஷ் சாவ்லா | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ரூ. 4.14 கோடி |
| ராஸ் டெய்லர் | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ. 4.6 கோடி |
| ராகுல் திராவிட் | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ. 2.3 கோடி |
| ஜோகன் போத்தா | ராஜஸ்தான் ராயல்ஸ் | ரூ. 4.37 கோடி |
| பிரட் லீ | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ரூ. 1.84 கோடி |
| மோர்ன் மோர்கெல் | டெல்லி டேர்டெவில்ஸ் | ரூ. 2.18 கோடி |
| டக் போலிங்கர் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ. 3.22 கோடி |
| முத்தையா முரளிதரன் | கொச்சி அணி | ரூ. 5.06 கோடி |
| அஸ்வின் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ரூ. 3.91 கோடி |
| ஆஷிஷ் நெஹ்ரா | சஹாரா புனே வாரியர்ஸ் | ரூ. 3.91 கோடி |
| டிர்க் நான்ஸ் | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | ரூ. 2.99 கோடி |
| இஷாந்த் சர்மா | டெக்கன் சார்ஜர்ஸ் | ரூ. 2.07 கோடி |
| டேல் ஸ்டெய்ன் | டெக்கன் சார்ஜர்ஸ் | ரூ. 5.32 கோடி |
சேலம் தேமுதிக மாநாடு-திமுக மீது கடும் விமர்சனம்-அதிமுகவுடன் கூட்டணி?
சேலம்: சேலத்தில் தேமுதிகவின் மாநில மாநாடு இன்று பிற்பகல் தொடங்கியது. மாலை 5 மணிக்கு மேல் கட்சியின் நிர்வாகிகள் பேசத் தொடங்கினர். இரவில் கட்சித் தலைவர் விஜயகாந்த்
பேசுகிறார். கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் கேப்டன் என்று பேசினார். இதன் மூலம், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகியுள்ளது.தேமுதிகவினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள சேலம் தேமுதிக மாநில மாநாடு இன்று பிற்பகல் தொடங்கியது.
கட்சி தொடங்கிய பின்னர் பெரிய அளவில் மாநாடு எதையும் நடத்தவில்லை தேமுதிக. மாறாக வருகிற தேர்தல்களில் எல்லாம் தனியாக போட்டியிடுவதும், ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்றவற்றை நடத்துவதிலும் கட்சியை வழிகாட்டி வந்தார் விஜயகாந்த்.
தமிழக அரசியலில் தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை ஆணி்த்தரமாக இல்லாவிட்டாலும் கூட, ஓரளவு நிரூபித்து விட்டார் விஜயகாந்த். இதையடுத்து அவருடன் கூட்டணி சேர கட்சிகளுக்குள் கடும் போட்டா போட்டி.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி கட்சியினரை உற்சாகமூட்டும் வகையில் வீரபாண்டியாரின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில் பிரமாண்ட மாநில மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார் விஜயகாந்த்.
நாமக்கல் சாலையில் வீராசாமிபுதூரில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாடு இன்று பிற்பகல் தொடங்கியது. கட்சித் தலைவர் விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
அப்போது மனைவி பிரேமலதா, அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. மாலை 5 மணிக்கு மேல் கட்சி நிர்வாகிகள் பேசத் தொடங்கினர். பேச்சாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற் போல திமுகவையும், திமுக அரசையும் கடுமையாக சாடிப் பேசினர். ஒருவர் கூட அதிமுகவையோ, முந்தைய அதிமுக ஆட்சிகள் குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிலும் ஒருவர் அதிமுகவிடம் எத்தனை தொகுதிகளைக் கேட்டாலும் அது தரும். எனவே கேப்டன், அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று பேசியதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முடிவுக்கு விஜயகாந்த் வந்து விட்டதை உணர முடிகிறது.

இறுதியாக விஜயகாந்த் பேசவுள்ளார். அப்போது அவர் கூட்டணி குறித்து அவர் முறைப்படி அறிவிப்பார்.
இதன் காரணமாக தேமுதிகவினர் பெரும் எதிர்பார்ப்புடன் சேலத்தில் குவிந்துள்ளனர். மாநாட்டையொட்டி சேலமே தேமுதிகவினர் முற்றுகையால் திமிலோகப்பட்டு வருகிறது.
மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தலும், மேடையும் போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் டிஜ்ட்டல் பேனர்கள் வெளுத்துக் கட்டி வருகின்றன. எங்கு பார்த்தாலும் விஜயகாந்த்தின் பளிச் சிரிப்பு போஸ்டர்களும், டிஜிட்டல் பேனர்களும் காணப்படுகின்றன.
மாநாட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டிருந்தாலும் கூட, அதிமுக பாணியில், தேமுதிகவும், சிறப்புப் பாதுகாப்புப் படையை தனது தொண்டர்களைக் கொண்டு அமைத்துள்ளது.அஜித் - விஜய்யின் அரசியல் டிஸ்கஷன்!
சமீபத்தில் அஜித்தும் விஜய்யும் பின்னி மில் செட்டில் சந்தித்துக் கொண்டதாக செய்தி
வெளியானதல்லவா... இந்த சந்திப்பு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட சந்திப்பு என்பதுதான் இதில் ஹைலைட்.
இந்த சந்திப்பின்போது தங்களின் அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் திட்டங்கள் குறித்துப் பேசியதாக செய்திகள்
தெரிவிக்கின்றன. பொதுவாக இதுபோன்ற சந்திப்புகளின்போது நடந்ததை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்தும் கசிய விட்டுள்ளனர்.
விஜய்யின் காவலன் படத்துக்கு எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது, விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் அஜீத் பிரியாணி விருந்து அளித்துள்ளார். அவர்களுடன் படப்பிடிப்புக் குழுவினரும் விருந்தில் பங்கேற்றனர்.
வெளியானதல்லவா... இந்த சந்திப்பு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட சந்திப்பு என்பதுதான் இதில் ஹைலைட்.இந்த சந்திப்பின்போது தங்களின் அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் திட்டங்கள் குறித்துப் பேசியதாக செய்திகள்
தெரிவிக்கின்றன. பொதுவாக இதுபோன்ற சந்திப்புகளின்போது நடந்ததை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்தும் கசிய விட்டுள்ளனர்.விஜய்யின் காவலன் படத்துக்கு எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது, விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் அஜீத் பிரியாணி விருந்து அளித்துள்ளார். அவர்களுடன் படப்பிடிப்புக் குழுவினரும் விருந்தில் பங்கேற்றனர்.
லோரியல் இந்தியா அம்பாஸடர்: ஐஸ்வர்யாவை ஓரங்கட்டிய பிரீடா
லண்டன்: லோரியல் நிறுவனத்தின் இந்திய பிராண்ட் அம்பாசடராக இருந்து வந்த கண்ணழகி ஐஸ்வர்யாவை ஓரம் கட்டி விட்டு ஸ்லம்டாக் மில்லியனர் நாயகி பிரீடா பின்டோ, அந்த இடத்திற்கு வந்துள்ளார்.
லோரியலி்ன் புத்தாண்டு தொலைகாட்சி விளம்பரத்தில் ஐஸ்வர்யாவைத் தவிர பிறரும் இருந்தனர். அதில் பிரீடா பின்டோவும் ஒருவர். இது ஐஸ்வர்யாவை வியப்பில் ஆழ்த்தியதாம்.
இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்ன நடந்தது என்பதை இனி தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா கூறியதாக அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஒரு விருது வழங்கும் விழாவில் ஐஸ்வர்யா நடனம் ஆடவிருப்பதால் அவர் அதில் பிஸியாக இருக்கிறார். அதனால் அவரால் இந்த விஷயம் பற்றி எதுவும் கூற முடியாது என்று அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
ஐஸ்வர்யா கடந்த 2005-ம் ஆண்டு முதல் லோரியல் அம்பாஸடராக இருக்கிறார். பின்டோ கடந்த 2009-ல் இருந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரீடா மூலம் ஐஸ்சுக்கு 'பலூடா' ஐஸ் கொடுத்துட்டாங்களே...!

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் ஸ்வேதா திவாரி வெற்றி - ரூ. 1 கோடி பரிசு
பிக் பாஸ்-4 ரியாலிட்டி ஷோவில் டிவி நடிகை ஸ்வேதா திவாரி வெற்றி பெற்றார். அவருக்கு ரூ. 1 கோடி பரிசு கிடைத்தது.
கடந்த 14 வாரங்களாக அவர் உள்ளிட்ட போட்டியாளர்கள் புனே அருகில் லோனாவாலாவில் உள்ள ஒரு பங்களாவில் 'அடைத்து' வைக்கப்பட்டு போட்டி நடந்து வந்தது. இதில் இறுதி வெற்றியாளராக ஸ்வேதா திவாரி அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு பரிசுத் தொகையாக ரூ. 1 கோடி கிடைத்தது. சல்மான் கான் இந்த போட்டியை நடத்தி வந்தார்.
போட்டியில் கிரேட் காலி 2வது இடத்தைப் பிடித்தார். அஷ்மிதா படேலுக்கு 3வது இடம் கிடைத்தது.
வெற்றி குறித்து ஸ்வேதா திவாரி கூறுகையில், பிக் பாஸ் போட்டியில் வென்றதைப் பெருமையாக கருதுகிறேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
தனது பரிசுத் தொகையை தனது குழந்தைக்காக செலவிடப் போவதாக கூறியுள்ளார் ஸ்வேதா.
நடிகர் ராஜா சௌத்ரியின் முன்னாள் மனைவி தான் ஸ்வேதா திவாரி. கவர்ச்சிகரமான வேடங்களில் டிவியில் நடித்து பிரபலமானவர். தற்போது கணவரைப் பிரிந்து தனது ஒரே குழந்தையுடன் வசித்து வருகிறார் ஸ்வேதா என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)