Saturday, December 4, 2010

300 மூட்டை அரிசி தானம் செய்து ட்ரைலர் வெளியிட்ட விஜய்!

தனது அடுத்த படமான காவலன் ட்ரைலர் வெளியீட்டு விழாவை ஏழைகளுக்கு உதவும் வகையில் இன்று நடத்தினார் நடிகர் விஜய்.

ட்ரைலர் வெளியீட்டையொட்டி 300 ஏழைக் குடும்பங்களுக்கு 300 மூட்டை அரிசி தானம் செய்தார்.

விஜய் நடித்த காவலன் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், ஏழைகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் வடபழனி ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடந்தது.

விழாவில் விஜய் பங்கேற்று 300 ஏழை குடும்பங்களுக்கு 300 மூட்டை இலவச அரிசி வழங்கினார். காவலன் பட டிரைலரையும் வெளியிட்டார். விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷக்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய விஜய், "காவலன் பட டிரைய்லர் வெளியிட அழைத்ததும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. பட டிரெய்லர் விழாவுக்கு செலவிடும் தொகையை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்யலாம் என்று தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரத்திடம் கூறினேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று, ஷக்தி சிதம்பரம் ஏழைகளுக்கு இலவச அரிசி கொடுக்க சம்மதித்தார். அதோடு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவையும் நடத்துவதாக கூறியதால், விழாவுக்கு வர சம்மதித்தேன் என்றார்.

விழாவில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், மேனேஜர் மற்றும் பிஆர்ஓ பிடி செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியையொட்டி ஜேஎஸ் திருமண மண்டபத்தையொட்டியுள்ள இடங்களில் விஜய்யின் பெரிய பெரிய கட் அவுட்டுகள், சாரட் வண்டியில் விஜய் பயணிப்பது போன்ற அட்டை பொம்மை போன்றவற்றை வைத்திருந்தனர்.

மன்மதன் அம்பு.. என்ன பட்ஜெட்?

மன்மதன் அம்பு படத்தின் பட்ஜெட் என்ன என்ற கேள்விக்கு கடைசி வரை தயாரிப்பாளரும் படத்தின் ஹீரோவும் மழுப்பலாகவே பதில் கூறினர்.

இந்தப் படம் ரூ 45 கோடியில் எடுக்கப்படுவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.

சொகுசு கப்பலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. கமல் ஹாஸனுக்கு சம்பளம், மாதவன், த்ரிஷா சம்பளம் என எப்படிப் பார்த்தாலும் ரூ 40 கோடிக்குள் இந்தப் படம் முடிந்துவிட்டிருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இன்று சென்னையில் நடந்த மன்மதன் அம்பு பிரஸ் மீட்டில் இதுகுறித்து கமல் ஹாஸனிடம் கேட்கப்பட்டது. அவர் நேரடியாக பதில் அளிக்காமல், ஐந்து விரல்களை மடக்கிக் காட்டி 50 ரூபாய் என்றார்.

அதாவது ஐம்பது கோடியாம்!

இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். ஆனால் விநியோக உரிமையை ஜெமினிக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 17-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது இந்தப் படம். மன்மதன் அம்புடன் மோதவிருப்பது விஜயகாந்தின் விருதகிரி!!

கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்?


ஷங்கரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்திலிருந்து நடிகர் விஜய் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

ஜெமினி நிறுவனம் தயாரிக்கவிருந்த ரீமேக் படம் இது. ஷங்கர் தனது கேரியரில் முதன்முதலில் இயக்கும் ரீமேக்கும் இதுவே.

தமிழில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பதாகக் கூறப்பட்டது. தெலுங்கில் விஜய் வேடத்தில் மகேஷ்பாபு நடிப்பார் எனவும் அந்தப் படத்துக்கு தலைப்பு 3 ராஸ்கல்ஸ் என்றும் அறிவித்திருந்தனர்.

படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் துவங்குவதாக இருந்த நிலையில், இந்த பரபரப்பு எழுந்துள்ளது.

விஜய் இப்போது நடித்துவரும் வேலாயுதம் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம். ஆனால் அதற்குள் 3இடியட்ஸை துவங்குவதில் ஷங்கர் உறுதியாக உள்ளாராம்.

வேலாயுதம் படம் முடியும் முன்பே 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதாம். எனவே இந்தப் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று விஜய் கூறிவிட்டதாகவும், ஷங்கரும் அவரும் நண்பர்களாகப் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்போது விஜய்க்கு பதில் புதிய நாயகனைத் தேடுகிறார்கள் ஷங்கரும் ஜெமினி நிறுவனத்தினரும்...

Friday, December 3, 2010

மன்மதன் அம்பு... அமெரிக்க உரிமை ரூ 3 கோடிக்கு விற்பனை!

கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு திரைப்படத்தின் அமெரிக்க உரிமை ரூ 3 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

கமல் படங்களுக்கு வெளிநாடுகளில் ஓபனிங் என்பது தசாவதாரம் வரை இல்லாமல் இருந்தது. தசாவதாரத்துக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உன்னைப் போல் ஒருவனும் வெளிநாடுகளில் ரிலீசானது.

இப்போது மன்மதன் அம்பு படத்தின் அமெரிக்கா மற்றும் கனடா உரிமா ரூ 3 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. கமல் படங்களைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய விலையாகும். இதற்கு முன் அவரது தசாவதாரத்துக்கு ரூ 1.5 கோடி தரப்பட்டது. 

கே எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல்-த்ரிஷா-மாதவன்-சங்கீதா-ஓவியா நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் வெளிநாட்டு நடிகையும் நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு - இயக்குநர் கே நட்ராஜ் மகள் திருமணம்: ரஜினி வாழ்த்து

ரஜினியின் நண்பரும் இயக்குநருமான நடராஜின் மகள் ரஜினிக்கும் வெண்ணிலா கபடிக் குழு ஹீரோ விஷ்ணுக்கும் நேற்று திருமணம் [^]நடந்தது.

ரஜினி நேரில் போய் மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களான அன்புள்ள ரஜினிகாந்த் [^] , வள்ளி போன்ற படங்களை இயக்கியவர் கே நட்ராஜ். பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்.

தங்களின் ஆழ்ந்த நட்பை வெளிக்காட்டும் வகையில், தன் மகளுக்கு ரஜினி என்றே பெயர் சூட்டினார் நட்ராஜ்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் ஹீரோவும், பிரபல காவல்துறை உயர் அதிகாரி ரமேஷ் குடாவ்லாவின் மகனுமான விஷ்ணுவுக்கும் ரஜினிக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் நேற்று பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடந்தது. ரஜினி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்தார்.

டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட ஏராளமான உயர் போலீஸ் [^] அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரஜினியின் நண்பரும் இயக்குநருமான நடராஜின் மகள் ரஜினிக்கும் வெண்ணிலா கபடிக் குழு ஹீரோ விஷ்ணுக்கும் நேற்று திருமணம் [^]நடந்தது.

ரஜினி நேரில் போய் மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களான அன்புள்ள ரஜினிகாந்த் [^] , வள்ளி போன்ற படங்களை இயக்கியவர் கே நட்ராஜ். பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்.

தங்களின் ஆழ்ந்த நட்பை வெளிக்காட்டும் வகையில், தன் மகளுக்கு ரஜினி என்றே பெயர் சூட்டினார் நட்ராஜ்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் ஹீரோவும், பிரபல காவல்துறை உயர் அதிகாரி ரமேஷ் குடாவ்லாவின் மகனுமான விஷ்ணுவுக்கும் ரஜினிக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் நேற்று பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடந்தது. ரஜினி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்தார்.

டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட ஏராளமான உயர் போலீஸ் [^] அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தன் வாழ்க்கையை படமாக்கும் ஷகிலா!



தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாவாக எடுக்கிறார் கவர்ச்சி நடிகை ஷகிலா. 

தமிழில் காமெடி நடிகையாக அறிமுகமாகி, பின்னர் மலையாளத்தில் கவர்ச்சி பாமாக மாறி கலக்கியவர் ஷகிலா.

பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவரது படங்கள் மோகன்லால், மம்முட்டி படங்களை விட அதிக நாட்கள் ஓடி பரபரப்பு ஏற்படுத்தின.

இவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். ஆனால் திருமணம் நடக்கவில்லை. மிகுந்த ஏமாற்றமடைந்தார்.

இந்த நிலையி ஷகிலா தனது வாழ்க்கையை படமாக்க முடிவு செய்துள்ளார். இதற்கான கதையை அவரே எழுதியுள்ளார். இப்படத்தை எஸ்.பி.ஆர். ராஜா என்பவர் இயக்குகிறார். இவர் பயணங்கள் தொடரும் என்ற படத்தை இயக்கியவர். தெலுங்கிலும் பல படங்கள் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றப் போகிறாராம் ஷகிலா. 

இது பற்றி ஷகிலா கூறுகையில், "சினிமா இயக்குநராக வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. என் வாழ்வில் நடந்த கசப்பான மற்றும் சந்தோஷமான சம்பவங்களையே கதையாக உருவாக்கியுள்ளேன். அதைப் படமாக எடுக்க உள்ளேன். இந்த படத்தில் நானே கதாசிரியராக இருப்பது மகிழ்ச்சி. எஸ்.பி.ஆர். ராஜா இயக்குகிறார். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றுவேன்.

நடிகர், நடிகை தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் துவங்க திட்ட மிட்டுள்ளோம்.

இதற்கு அடுத்த படத்தை நானே இயக்கவும் முடிவு செய்துள்ளேன்..," என்றார்.

இதோ ஒரு புதிய உயிர்!


ஹூஸ்டன்: உயிரின் அடிப்படை ரசாயனமான பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற தனிமம் கொண்ட புதிய பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு உயிர் உருவாக 6 வேதியல் பொருட்கள் கட்டாயம் என்பது தான் இதுவரை உயிரிலார்கள் கூறி வந்த 'விதி'. அந்த 6 பொருட்கள்: கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர்.

இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் இந்த ரசாயனங்களால் உருவானவை தான்.

இதில் டிஎன்ஏ (deoxyribo nucleic acid-DNA ) எனப்படும் நமது ஜீன்கள் உருவாக பாஸ்பரஸ் மிக மிக அவசியம். இதனால் உயிரின் அடிப்படை வேதிப் பொருள்களில் மிக முக்கியமானதாக பாஸ்பரஸ் கருதப்படுகிறது.

இதனால் பாஸ்பரஸ் இல்லாமல் உயிர் என்பதே இல்லை என்பது தான் இதுவரை கூறப்பட்டு வந்த இயற்கை விதி.

ஆனால், நேற்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா இந்த அடிப்படை விதியையே தகர்க்கும் வகையில் ஒரு செய்தி [^] யை வெளியிட்டுள்ளது.

அதாவது பூமியில் ஒரு புதிய ரக பாக்டீரியாவை நாஸா கண்டுபிடித்துள்ளது. இந்த பாக்டீரியாவின டிஎன்ஏவில் பாஸ்பரஸ் இல்லை என்பது தான் அந்த பகீர் தகவல். அதன் டிஎன்ஏவி்ல் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற ரசாயனம் தான் உள்ளது.

ஆர்சனிக் என்பது விஷத்தன்மை கொண்ட, உயிர்களைக் கொல்லும் திறன் கொண்ட ஒரு தனிமம். ஆனால், அதுவே ஒரு உயிரை உருவாக்கியும் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் மோனோ லேக் என்ற ஏரியில் இந்த பாக்டீரியாவை கணடுபிடித்துள்ளார் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வுப் பிரிவு விஞ்ஞானியான பெலிஸா வோல்பே சிமோன்.

இவர் சில ஆண்டுகளுக்கு முனபே, உயிர் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பூமி உருவானபோது நிலவிய சூழல், இருந்த விஷ வாயுக்கள் சூழ்ந்த வளிமண்டலம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, பாஸ்பரசின் ரசாயன குணங்களைக் கொண்ட ஆர்சனிக் போன்ற விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கூட உயிர்களை உருவாக்கியிருக்கலாம். அந்த வகை உயிர்கள் இன்னும் கூட எங்காவது இருக்கலாம் கூறியிருந்தார்.

அப்போது இவரது இந்தக் கருத்தை ஆச்சரியத்துடன் பார்த்த நாஸா, அது குறித்து மேலும் விரிவான ஆய்வு நடத்த இவருக்கு நிதியுதவி வழங்கியது.

இதையடுத்து சிமோனின் விஞ்ஞானிகள் டீம் இந்த மாற்றுவகை உயிர் குறித்த ஆய்வுகளைத் தொடங்கினர்.

அவர்களுக்கு உலகின் மிகச் சிறந்த ஆர்சனிக் ஆராய்ச்சியாளராகக் கருதப்படும் ரோனால்ட் ஓரேம்லாண்ட் பெரும் உதவிகள் செய்தார். இவர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் மூத்த ஆராச்சியாளர் ஆவார். உலகின் ஆர்சனிக் நிறைந்த பகுதிகளைத் தேர்வு செய்து, அந்த இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் சிமோனின் குழுவினரை வழிநடத்தினார்.

அவர் சொன்ன இடங்களில் ஒன்று தான் கலிபோர்னியாவின் மோனோ லேக் என்ற ஆர்சனிக் நிறைந்த விஷ ஏரி. அங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தான் இந்த பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு GFAJ-1 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஆர்சனிக்-பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் 'உயிர்' என்பது இது தான் என்ற அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது.

Thursday, December 2, 2010

மன்மதன் அம்பு... ஓவியா உடைத்த ரகசியம்!!



அது என்ன மன்மதன் அம்பு... எந்த மாதிரி படம் இது... காதலா... சஸ்பென்ஸ் கலந்த நகைச்சுவையா அல்லது வயது வந்தவர்களுக்கான செக்ஸ் காமெடியா என ரசிகர்கள் பலரும் கேட்கும் அளவுக்கு படம் குறித்து எதுவுமே தெரியாத நிலை.

இந்தப் படத்தில் சில காட்சிகளில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள ஓவியாவோ, எல்லா சஸ்பென்ஸ்களையும் ஜஸ்ட் லைக் தட் சொல்லிவிட்டார்.

என்ன மாதிரி படம் இந்த மன்மதன் அம்பு...?

"மன்மதன் அம்பு'வில் ஒரு சில காட்சிகளில்தான் வருகிறேன். அந்தக் காட்சிகளில் எல்லாம் நகைச்சுவை தூக்கலாகவே உள்ளது. அந்தளவுக்கு அந்தக் காட்சிகள் வந்துள்ளன. இந்தப் படத்தின் கதை முழுக்க நகைச்சுவைதான். 'பஞ்சதந்திரம்', 'தெனாலி', 'அவ்வை சண்முகி' உள்ளிட்ட முந்தைய படங்களின் சாயலில் அமைந்திருக்கிறது..." என்றார்.

கவனிக்க, மூன்றுமே கமல் - ரவிக்குமார் படங்கள்தான். அப்போ.. மூன்று படங்களின் கலவையான கதையோ...!

Wednesday, December 1, 2010

இம்மாத சினிமா ரிலீஸ் அட்டவணை:

டிசம்பர் 3:- 

சிக்குபுக்கு,

 தா, 

ரத்த சரித்திரம்




டிசம்பர் 10:- 

விருதகிரி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, 


அய்யனார், சித்து ப்ளஸ்டூ:-



டிசம்பர் 17 :-

மன்மதன் அம்பு, 

இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், மெகா பட்ஜெட் படமான மன்மதன் அம்பு, விளம்பரங்கள் கூட வெளியாகாமல் உள்ளது கமல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது




டிசம்பர் 24:-
காவலன்


தமிழில் நல்ல கதை இல்லே...! - ப்ரியாமணி அலட்டல்

தமிழில் வரும் படங்களில் நல்ல கதைகளே இல்லை. அதனாலேயே நான் தமிழில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளவில்லை, என்கிறார் ப்ரியாமணி.

தமிழ் சினிமாவையும் தமிழ் ரசிகர்களின் ரசனையையும் குறை சொல்வது இன்றைக்கு பேஷனாகிவிட்டது.

சமீபத்தில் மலையாளிகள் மத்தியில் தமிழரை கேவலமாகப் பேசி, அதற்கு வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் ஆர்யா. அவர் விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை.



இந்த நிலையில், பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரால் சினிமா வாழ்க்கை பெற்ற ப்ரியாமணி தன் பங்குக்கு தமிழ் சினிமாவை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "தமிழ் சினிமாவில் நல்ல கதைகளே இல்லை. புதிதாக ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடமும் நல்ல கதை இல்லை. அதனால்தான் தமிழ்ப் படங்களை நான் ஒப்புக் கொள்வதில்லை.

முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன். தெலுங்குப் படங்களில் இந்த நிலை இல்லை", என்று கூறியுள்ளார்.

இந்தப் பேட்டியைப் படித்ததும் கொந்தளித்த இளம் இயக்குநர் ஒருவர், "ஆர்யாவுக்கு குகநாதன் கொடுத்த ட்ரீட்மெண்ட்தான் இவருக்கும் சரியாக வரும் போலிருக்கிறது", என்றார் கடுப்புடன்.

Tuesday, November 30, 2010

கற்பழிக்கப்பட்ட மகளை கலெக்டர் அலுவலகத்தில் விட்ட பெற்றோர்: காப்பகத்தில் சேர்த்த அதிகாரிகள்

தேனி: தேனி மாவட்டத்தில் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது மாணவியை பெற்றோரும், ஊர் மக்களும் சேர்ந்து அரசிடம் ஒப்படைப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டுச் சென்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மி நாயக்கன்பட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை கணித ஆசிரியர் மகேந்திரன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

இதையடுத்து கூலி வேலை செய்யும் அம்மாணவியின் பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் படித்தும் அதிகாரிகள் தங்கள் மகளை பாதுகாக்கத் தவறிவிட்டனர் என்று குற்றம் சாட்டினர். மேலும், அதற்கு தண்டனையாக தங்கள் மகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டுச் சென்றனர்.

இது குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது,

பள்ளியில் நீங்கள் எங்கள் மகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்வீர்கள் என்று நினைத்தோம். ஆனால், உங்கள் அஜாக்கிரதையினால் எங்கள் மகள் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். மானம் மரியாதையைப் பெரிதாக நினைக்கும் எங்களுக்கு இனி எங்கள் மகள் தேவையில்லை. குடும்ப மானம் காற்றோடு போய்விட்டது. அதனால் இனி அவளை உங்களிடமே ஒப்படைக்கிறோம். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் செயலுக்கான தண்டனையாகும் என்று கூறினார்கள்.

பெற்றோரின் இந்த செயலால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அம்மாணவியை கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் சேர்த்தனர்.

இதற்கிடையே ஆசிரியர் மகேந்திரன் நேற்று பெரியகுளம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அவரை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

செல்போன் மூலம் விளம்பரம் செய்ய இன்று முதல் தடை-மீறினால் ரூ. 2 லட்சம் அபராதம்

டெல்லி: செல்போன்களில் வரும் விளம்பரங்கள், விளம்பரம் தொடர்பான அழைப்புகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

அப்போதுதான் போய் உட்கார்ந்திருப்போம். படபடவென்று செல்போன் ஒலிக்கும். மடமடவென்று ஓடிப் போய் எடுத்தால், உங்களுக்கு எத்தனை லட்சம் வேண்டுமானாலும் லோன் தர்றோம், வாங்கிக்கிறீங்களா என்று கேட்டு டென்ஷன் செய்வார்கள்.

இப்படிப்பட்ட கால்களால் ஏகப்பட்ட தொல்லைகள். சமீபத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்தபோது அவரை அழைத்த ஒரு வங்கி நிறுவனம், கடன் தேவையா என்று அவரை கத்த விட்டு டென்ஷனாக்கியது.

இந்த தொல்லைகளை தடுக்க வேண்டும் என டெலிபோன் ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் முறையிடப்பட்டது. அதையடுத்து டிராய் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

இனிமேல், டெலிபோன்களில் பேசி விளம்பரம் செய்யக்கூடாது. அதை மீறி செய்யப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

விளம்பர நிறுவனங்களுக்கு தனியாகவும், டெலிபோன் நிலையத்துக்கு தனியாகவும் அபராதம் விதிக்கப்படும். விளம்பர நிறுவனம் முதல் தடவை தவறு செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதமும், 2-வது தடவை செய்தால் ரூ.72 ஆயிரமும் விதிக்கப்படும். 6 தடவை மீறினால் அபராதம் ரூ.2 லட்சமாக உயரும். டெலிபோன் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதே நேரத்தில் நிறுவனங்கள் டெலிபோனில் விளம்பரம் செய்யும்போது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். விளம்பர நிறுவனங்களுக்கு 700-ல் தொடங்கும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் இருந்து எந்த எண்ணுக்கும் அவர்கள் டயல் செய்து பேசி விளம்பரம் செய்யலாம்.

700 எண்ணில் தொடங்கும் போன் வந்தாலே இது விளம்பர போன் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். எனவே அந்த அழைப்பை ஏற்று பேசுவதாக இருந்தால் பேசலாம். தேவை இல்லை என்றால் துண்டித்து விடலாம்.

புதிய விதியமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக டிராய் தெரிவித்துள்ளது.

இனிமேல் நிம்மதியாக உட்கார்ந்து விட்டு வரலாம்.

இந்நாள் பிராட்மேன் டெண்டுல்கர்: லாரா புகழாரம்



துபாய்: மேற்கு இந்தியத் தீவின் சிறந்த கிரிக்கெட் வீரரான லாரா, நவீன யுகத்தின் பிராட்மேன் சச்சின் டெண்டுல்கர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஆனால் அவர் பிராட்மேனையும், சச்சினையும் ஒப்பிட்டுப் பார்க்க மறுத்துவிட்டார்.

இது குறித்து லாரா கூறியதாவது,

பிராட்மேனுக்கும், சச்சினுக்கும் இடையில் எந்தவித போட்டியும் இல்லை என்றே நினைக்கிறேன். இருவருமே தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் ஆவர்.

தன்னால் என்ன முடியும் என்பதை சச்சின் உலகிற்கு காட்டிவிட்டார். அவர் இந்த விளையாட்டில் இத்தனை காலமாக இருப்பது பாராட்டிற்குரியது.

அவர் விளையாடும்போதும் நீண்ட நேரம் களத்தில் இருப்பார். அவர் அனைத்து சாதனைகளையும் முறியடித்துக் கொண்டிருக்கிறார். அவர் 16 வயதில் விளையாடத் துவங்கி தற்போது 37 வயதாகியும் இன்னும் சிறப்பாக விளையாடுவதை நான் வெகுவாக பாராட்டுகிறேன் என்றார்.

ஒரு காலத்தில் சச்சினையும், லாராவையும் கிரிக்கெட் உலகம் ஒப்பிட்டுப் பார்த்து வந்தது. இந்தப் போட்டியில் லாராவை தனது ஸ்டைலாலும், ஸ்திரமான ஆட்டத்தாலும் டெண்டுல்கர் ஓரம் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழப் போரின் இறுதியில் நடந்தது என்ன... விடை தருமா விக்கிலீக்ஸ்?



லண்டன்: ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்தது என்னவென்ற மர்மத்துக்கு விக்கிலீக் ஆவணங்களில் விடை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ரகசிய தகவல் தொடர்புகள் குறித்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. 

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு உலகின் பல்வேறு நாடுகளுடன் வைத்திருக்கும் ராஜரீக உறவுகள் தொடர்பான 251,287 ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வசம் சிக்கியுள்ளன.

அதில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் சம்பந்தப்பட்டவை. 1996ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையான காலப் பகுதிக்குள் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜாங்கத் தொடர்புகள் தொடர்பான ஆவணங்கள் வெளியாகியுள்ளன. வரும் நாட்களில் இவை விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான இராஜதந்திரத் தொடர்பின் இரகசிய விடயங்கள் அடங்கிய ஆவணங்கள் வெளிவருவது குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

போரின் இறுதி நாட்களில் பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டது மற்றும் புலிகளின் முதல்கட்ட தலைவர்கள் என்ன ஆனார்கள் போன்றவற்றுக்கான பதில்கள் இந்த ஆவணங்களில் இருக்கும் எனத் தெரிகிறது.

உதயநிதிக்கு ஜோடி ஸ்ருதி?

தமிழில் இப்போது ஏழாம் அறிவு படத்தில் நாயகியாக நடித்து வரும் கமல் ஹாஸன் மகள் ஸ்ருதி, அடுத்து உதயநிதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழாம் அறிவு படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கிறார், நண்பேன்டா படத்தில். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் இயக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி படமாகும்.

சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக உடற்பயிற்சி, நடனப் பயிற்சி, சண்டைப் பயிற்சி என பல பயிற்சிகளில் மும்முரமாக உள்ளார் உதயநிதி.

நண்பேன்டா படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், படத்தின் ஹீரோயின் ஸ்ருதி ஹாஸன் என தெரிய வந்துள்ளது.

இந்தப் படத்தில் நடிக்குமாறு ஸ்ருதியிடம் கேட்டதும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாராம். பெரும் தொகை அவருக்கு சம்பளமாகத் தரப்படவிருக்கிறதாம்

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை-விரைவில் அரசியல்?




சென்னை: இளைய தளபதி என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். விரைவில் அவர் அரசியல் பிரவேசம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக ஏற்கனவே கூறியுள்ளார் விஜய். இருப்பினும் அதற்கேற்ற சமயம் வரும்போது முடிவெடுப்பேன் என்றும் ரசிகர்களிடம் கூறி வைத்துள்ளார். இடையில் அவரை காங்கிரஸுக்கு இழுக்க முயற்சிகள் நடந்தன. இருப்பினும் அது சரிப்பட்டு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று திடீரென தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சென்னை வடபழனியில் உள்ள விஜய்க்குச் சொந்தமான ஜே.எஸ். திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை மாலை இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த மாவட்ட, நகர, ஒன்றிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தன் அரசியல் நிலைப்பாடு குறித்து விஜய் மனம் திறந்து பேசியதாகவும், நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் படப்பிடிப்புக்காக செல்லுமபோதெல்லாம் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையும், கருத்தும் கேட்டு வந்தார் விஜய்.

மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் விரைவில் அரசியல் பிரவேசம் இருக்கும் எனப் பேசினார். 

சில தினங்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ரசிகர்மன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் அரசியல் குறித்துப் பேசினார்.

அவரிடம் பேசிய நிர்வாகிகள், பொங்கல் பண்டிகைக்குள் அரசியலுக்கு வந்து விடுமாறு விஜய்யை வற்புறுத்தினராம். இந்த நிலையில்தான் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் வரவழைத்து ஆலோசனைநடத்தியுள்ளார் விஜய். எனவே விரைவில் அவரது அரசியல் பிரவேசம் இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

Monday, November 29, 2010

தமிழ் சினிமாவில் நடிக்கிறார் எதியூரப்பா!!

அரசியல் நடிப்பில் அசத்திக் கொண்டிருக்கும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா, இப்போது நிஜமாகவே சினிமாவிலும் நடிக்கப் போகிறாராம். கன்னடத்தில் அல்ல... தமிழ்ப் படத்தில்!

பூலோக ரக்ஷகன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் அய்யப்பன் புகழ் பாடும் பக்திப் படம். இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எதியூரப்பா.

இந்தப் படத்தில் நடிக்கும் இன்னொருவர் சபரிமலை கோயிலின் தர்மாதிகாரி மகன் பிரம்மதத்தன். 

பூலோக ரக்ஷகன் படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது, எதியூரப்பா நடிப்பதால் அல்ல... ஒரு பாடலை 200 பாடகர்கள் பாடியிருப்பதற்காக. இந்தப் பாட்டை 50 பாடலாசிரியர்கள் உருவாக்கியுள்ளனராம். 

விஷயம் தெரிய வந்ததிலிருந்து, 'அரசியலைப் போலவே, சினிமாவிலும் நடிப்பில் அசத்துவார் எதியூரப்பா என்பதில் சந்தேகமில்லை என கிண்டலாக கமெண்ட் அடிக்கிறார்களாம் சொந்த பாஜகவினரே!

Sunday, November 28, 2010

விஜய்யின் காவலன்... தடையை விலக்கியது உயர்நீதிமன்றம்!

சென்னை: விஜய்-அசின் ஜோடியாக நடித்துள்ள காவலன் படத்துக்கு போடப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதி மன்றம்.

சித்திக் இயக்கியுள்ள காவலன் படம் அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வர இருக்கிறது. 

இந்த நிலையில், காவலன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை பெற்ற விநியோகஸ்தர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவும், படத்தை வெளியிடும் சினிமா பாரடைஸ் சக்தி சிதம்பரமும், விநியோகஸ்தரர் சரவணனுடன் பேச்சு வார்த்தை நடத்தி, கலர் லேப் ஒப்பந்தத்தை தருவதாக ஒப்புதல் அளித்தனர். 

அதற்கு சரவணனும் சம்மதம் தெரிவித்தார். பின்னர், இந்த தகவல் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து காவலன் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிபதி ராஜேஸ்வர் உத்தரவிட்டார்.

எனவே திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் காவலன் வெளியாகிறது.

அசின் நடித்துள்ளதால் இந்தப் படத்தை புறக்கணிக்குமாறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சார்பில் 
கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விஜய்-அசின் ஜோடியாக நடித்துள்ள காவலன் படத்துக்கு போடப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதி மன்றம்.சித்திக் இயக்கியுள்ள காவலன் படம் அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், காவலன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை பெற்ற விநியோகஸ்தர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.இந்த ...

இலியானா ======= கரீனா கபூர்



இந்தியில் பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக இலியானா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படம் 3 இடியட்ஸ். வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்த படம். இப்படத்தை ஷங்கர், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார்.

இதற்கான கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. நாயகியாக இலியானா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார் இலியானா. கேடி படத்தின் மூலம்தான் இவர் நடிகையானார். ஆனால் கேடி ஓடாததால், அதிருப்தி அடைந்து தெலுங்கோடு நின்று விட்டார்.

தற்போது ஷங்கர் படம் என்பதால் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கு ஒப்புக் கொண்டு நடிக்கவுள்ளார். இந்திப் படத்தில் கரீனா கபூர் நடித்த வேடத்தில் இலியானா நடிக்கிறார். கரீனா கபூர் அப்படத்தில் பின்னி எடுத்திருப்பார். அதை மிஞ்சும் வகையில் இலியானா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இலியானாதான் நாயகியாக நடிக்கவுள்ளாராம். தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஜோடியாக நடிப்பார். தமிழில் விஜய்யுடன் ஜோடி போடுவார். 

இப்படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக இந்தி 3 இடியட்ஸை மீண்டும் மீண்டும் பார்த்து ஸட்டி செய்து வருகிறாராம் இலியானா. 


இந்தியில் பெரும் வெற்றி [^] பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் [^] , தெலுங்கு [^] ரீமேக்கில் நாயகியாக இலியானா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தியில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படம் [^] 3 இடியட்ஸ். வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்த படம். இப்படத்தை ஷங்கர், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார்.இதற்கான கலைஞர்களைத் ..

திரிஷா-மன்மதன் அம்பு பட ஆடியோ வெளியீடு

சிங்கப்பூரில் நடந்த மன்மதன் அம்பு பட ஆடியோ வெளியீட்டின்போது நான் பாடல் பாடியதற்கும், கவிதையை படித்ததற்கும் கமல்ஹாசன்தான் காரணம். அவர்தான் என்னை ஊக்குவித்தார். இதனால் அவரை எனது குருவாக மதிக்கிறேன் என்று கூறியுள்ளார் திரிஷா.

இந்தி திரிஷாவை கிட்டத்தட்ட கைவிட்டது போலாகி விட்டது. தமிழிலும், தெலுங்கிலும் இருந்த முதலிடத்தை திரிஷா எப்போதோ இழந்து விட்டார். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார் திரிஷா. காரணம், கமல். அவருடன் சேர்ந்து நடித்துள்ள மன்மதன் அம்பு படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார் திரிஷா. 

படத்தைப் பற்றி புகழ்ந்து பேசுவதோடு கமல்ஹாசனையும் வெகுவாகப் புகழ்கிறார். குறிப்பாக சிங்கப்பூரில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவின்போது தான் பாடல் பாடியதையும், கமலுடன் இணைந்து கவிதை வாசித்ததையும் கூறி சிலாகிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கமல்ஹாசன் தான் என்னிடம் அக்கறை காட்டி பாடவும், கவிதை வாசிக்கவும் ஊக்கம் கொடுத்தார். இதனால்தான் என்னால் அதை சிறப்பாக செய்ய முடிந்தது. இதனால் என்னைப் பொறுத்தவரை கமல் சார் ஒரு குரு.

இப்படத்தில் நான் வளரும் நடிகையாக நடித்துள்ளேன். சரியான ரொமான்டிக் காமெடி இது என்றார் திரிஷா.

திரிஷா இப்போது அஜீத்துடன் மங்காத்தா, தெலுங்கில் வெங்கடேஷுடன் சாவித்திரி ஆகிய படங்களில் 
நடித்து வருகிறாராம்.
சிங்கப்பூரில் நடந்த மன்மதன் அம்பு பட ஆடியோ வெளியீட்டின்போது நான் பாடல் பாடியதற்கும், கவிதையை படித்ததற்கும் கமல்ஹாசன்தான் காரணம். அவர்தான் என்னை ஊக்குவித்தார். இதனால் அவரை எனது குருவாக மதிக்கிறேன் என்று கூறியுள்ளார் திரிஷா.இந்தி திரிஷாவை கிட்டத்தட்ட கைவிட்டது போலாகி விட்டது. தமிழிலும், தெலுங்கிலும் இருந்த முதலிடத்தை திரிஷா எப்போதோ இழந்து விட்டார். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார் ..

Google Custom Search