Wednesday, December 15, 2010

இந்த வெள்ளிக்கிழமையும் 4 படங்கள்.. திணறும் தமிழ் சினிமா!

இதற்கு முன் காணாத பெரும் நெருக்கடியில் உள்ளது தமிழ் சினிமா. எந்தப் படமாக இருந்தாலும் இரண்டு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் தியேட்டர் பற்றாக்குறை... அல்லது குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்தில் திரையரங்குகள் இருப்பது.

நல்ல படங்கள் கூட கட்டாயமாக 1 வாரத்துக்குள் தூக்கப்படும் நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. உதாரணம் தா எனும் படம். நல்ல படம், ஓரளவு நல்ல கூட்டம் எல்லாம் இருந்தும் இரண்டாவது வாரமே இந்தப்படத்தை தூக்கச் சொல்லி நிர்பந்தப்படுத்துகிறார்களே என்று புலம்புகிறார் தயாரிப்பாளர். 

தியேட்டர்கள் தட்டுப்பாடு மட்டுமின்றி, தயாரிப்பாளர்களின் திட்டமிடல் இன்மையும் கூட இதற்குக் காரணமாக உள்ளது.

வாராவாரம் 4 படங்களுக்குக் குறையாமல் ரிலீஸாகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் 4 படங்கள் வெளியாகின்றன. அடுத்த இரு வாரங்களில் மேலும் 8 படங்கள் வெளியாக உள்ளன!

சசிகுமார் இயக்கத்தில் ஈஸன், சக்தி நடித்துள்ள ஆட்ட நாயகன், வெண்ணிலா கபடி குழு தயாரிப்பாளர்களின் நில் கவனி செல்லாதே மற்றும் வாடா போடா நண்பர்கள் ஆகியவை நாளா மறுநாள் வெளியாகவிருப்பவை..

இவற்றில் எந்தப் படம் தேறும், இரண்டு வாரங்களைத் தாக்குப்பிடித்து ஓடும் என்பதே கணிக்க முடியாததாக உள்ளது. ஈசன் படம் குறித்து ஓரளவு எதிர்ப்பார்ப்பு இருந்தாலும், இந்தப் படத்தை அடுத்த வாரம் வெளியாகும் மன்மதன் அம்பு பாதிக்குமோ என்று கவலைப்படுகின்றனர் விநியோகஸ்தர்கள்.

இப்படி வரைமுறையில்லாமல் படங்களை வெளியிடுவது தற்கொலைக்கு சமம் என்று கதறுகின்றனர் விநியோகஸ்தர்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை, பெட்டிக்குள் கிடந்தால் வட்டி கட்டி மாளாது என்று சிணுங்குகின்றனர் தயாரிப்பாளர்கள். இதற்கு தீர்வு காணப்பட்டே ஆக வேண்டும் என்று ஒருமித்த குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது திரையுலகில்!

மராத்தி- வங்காளத்திலும் சேனல் தொடங்கும் சன்!

மும்பை: மராத்தி மற்றும் வங்காள மொழிகளில் புதிய சேனல்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது இந்தியாவின் முன்னணி டிவி நெட்வொர்க்கான சன் குழுமம்.

தென்னிந்தியாவின் அசைக்க முடியாத தொலைக்காட்சி குழுமமாகத் திகழ்வது கலாநிதி மாறனின் சன் நெட்வார்க்.

ஆனால் இன்னமும் வடக்கில் பெரிய அளவில் கால்பதிக்கவில்லை இந்த நிறுவனம். இப்போது, வடக்கிலும் சேனல்கள் துவங்க முடிவெடுத்துள்ளது.

ஹிந்தி மொழி தவிர்த்து, பிற மாநில மொழிகளில் சேனல்களைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, மராத்தி மற்றும் வங்க மொழியில் சேனல்களைத் துவங்கவிருக்கிறார்கள். 

"தென் மாநில மொழி சேனல்கள் தவிர்த்து, வடக்கில் மாநில அளவில் சேனல்கள் துவங்குவதில் நாங்கள் ஆர்வமாக இருப்பது உண்மைதான். ஆனால் பொருத்தமான நேரத்துக்கு காத்திருக்கிறோம்" என்றார் சன் குழுமத்தின் சிஇஓ அஜய் வித்யாசாகர்.

ஏற்கெனவே டிவி 18 குழுமத்துடன் இணைந்து சன் 18 என்ற பெயரில் தொலைக்காட்சி சேவையில் ஈடுபட்டுள்ளது சன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து வடக்கில் புதிய சேனல்களைத் துவங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

2வது முறையாக கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை



லாஸ் ஏஞ்சலெஸ்: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், 2வது முறையாக கோல்டன் குளோப் விருதைப் பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குநர் டேனி பாயில் இயக்கிய 127 ஹவர்ஸ் படத்திற்காக, கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஸ்லம்டாக் படத்திற்காக ஒரிஜினல் இசைப் பிரிவில் கோல்டன் குளோப் விருதைப் பெற்றவர் ரஹ்மான். தற்போது மீண்டும் ஒரிஜினல் இசைப் பிரிவில் 127 ஹவர்ஸ் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ரஹ்மான். 

44 வயதான ரஹ்மான், ஸ்லம்டாக் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்ற பெருமைக்குரியவர் என்பது நினைவிருக்கலாம்.

ஜேம்ஸ் பிரான்கோ ஹீரோவாக நடித்துள்ள 127 ஹவர்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சனங்களும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஹ்மானின் இசையும் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. எனவே ரஹ்மான் மீண்டும் கோல்டன்குளோப் விருதைப் பெறுவார் என்று நம்பப்படுகிறது.

ரஹ்மானுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் ஒரிஜினல் இசைக்கான போட்டிப் பிரிவில் உள்ளனர்.

Monday, December 13, 2010

மன்மதன் அம்பு படத்துக்கு யு!

காமம் ததும்பும் பாட்டு, பாலுணர்வுக் குறியீடான தலைப்பு என பலரது எதிர்ப்பையும் ரிலீசுக்கு முன்பே சம்பாதித்துவிட்ட கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதன் மூலம் இந்தப் படம் அனைவரும் பார்க்கத்தக்கதே என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 23-ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகும் மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாஸன்- த்ரிஷா, மாதவன், சங்கீதா நடித்துள்ளனர். ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். ஆனால் அவர் இந்தப் படத்தை வெளியிடவில்லை. ஜெமினி நிறுவனம் வெளியிடுகிறது

3 இடியட்ஸ்... விஜய்க்கு பதில் சூர்யா?

ஷங்கர் இயக்குவதாக கூறப்படும் 3 இடியட்ஸ் ரீமேக்கிலிருந்து விஜய் விலகிவிட்டார் அல்லவா... இப்போது அவருக்குப் பதில் இந்த பாத்திரத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது. 

இந்தப் படம் இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அமீர் கான் வேடத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது. படப்பிடிப்புக்குக் கிளம்பிய நிலையில், படத்தின் தனது வேடத்துக்காக நிறைய கெட்டப் மாற்ற வேண்டிய நிலை இருந்ததால், அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகின. 

இதற்கு விளக்கமளித்த விஜய், இந்தப் படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்பதை படத்தின் தயாரிப்பாளர்தான் சொல்ல வேண்டும் என புரியாத அளவுக்குப் பேசி குழப்பினார்.

இந்த நிலையில், 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு பதில் சூர்யா நடிப்பார் என்றும், இதுகுறித்து அவரிடம் இயக்குநர் ஷங்கர் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய சூர்யா, "இந்தப் படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது.." என்பதோடு நிறுத்திக் கொண்டார்.

அட, யார்தான் நடிக்கிறீங்கன்னு சொல்லித் தொலைங்கப்பா... பெரிய ராணுவம் ரகசியம் பாருங்க!

Friday, December 10, 2010

ரஜினி - லதா மணிவிழா.. இன்று போயஸ் கார்டனில் நடந்தது!

சென்னை: ரஜினி - லதா தம்பதியரின் 60-ம் கல்யாணம் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடந்தது.

ரஜினி-லதா திருமணம் 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. ரஜினிக்கு நாளை மறுதினம் 61 வயது பிறக்கிறது. 60-ம் கல்யாணத்தை பிள்ளைகளும் பேரக் குழந்தைகளும் சேர்ந்து நடத்துவது மரபு. இதன் மூலம் தம்பதியருக்கு ஆயுள் அதிகருக்கும் என்பது இந்து மத நம்பிக்கை. திராவிட இயக்கங்கள் இதனை மணிவிழா என அழைக்கின்றன. சமஸ்கிருதத்தில் சஷ்யப்தபூர்த்தி என்கிறார்கள்.

ரஜினி - லதா மணிவிழா நிகழ்வுகள் இன்று அதிகாலையிலிருந்தே ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டில் துவங்கின. மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். சிறப்புப் பூஜைகள் மற்றும் ஹோமத்துடன் தொடங்கின நிகழ்ச்சிகள்.

தாலி கட்டினார்...

60-ம் கல்யாணத்தையொட்டி ரஜினி பட்டு வேட்டி-பட்டு சட்டை அணிந்திருந்தார். லதா பட்டுச்சேலை உடுத்தி இருந்தார். இருவரும் மணமேடையில் அமர்ந்து இருந்தனர். ஹோமம் வளர்க்கப்பட்டது. புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத லதா கழுத்தில் ரஜினி தாலி கட்டினார்.

நிகழ்ச்சியில் ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின், பேரக் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் பங்கேற்று வாழ்த்தினர். அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது.

மன்மதன் அம்பு 23-ம் தேதிக்கு தள்ளிப்போனது!

கமல்ஹாஸன் - த்ரிஷா நடிக்கும் மன்மதன் அம்பு திரைப்படம் டிசம்பர் 23-ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தப் படம் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவி்க்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் தெலுங்கு டப்பிங் தொடர்பான பணிகள் முடியாததால் இந்த தள்ளிப் போடல் என ரெட்ஜெயன்ட் அறிவித்துள்ளது.

தெலுங்கில் மன்மதன் பாணம் என இந்தப் படத்துக்கு பெயரிட்டுள்ளனர். கேரளாவில் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பே வெளியாகிறது. பழஸி ராஜா படம் எடுத்தவரும், கமலுக்கு நெருக்கமானவருமான கோகுலம் கோபாலன் இதன் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார்.

அடுத்த வாரம் மன்மதன் அம்பு படம் சென்சாருக்கு அனுப்பப்படுகிறது.

Wednesday, December 8, 2010

என்னை தெரியுமா - அறிந்தவன்

குறுகிய காலத்தில் 75,000 ஹிட்ஸுகளை கொடுத்து, மேலும் ஆதரிக்கும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றிகள் பல கோடி..



தெலுங்கில் 'நேநு மீக்கு தெலுசா" என்கிற பெயரில் 2008 அக்டோபரில் வெளிவந்த படம். தெலுங்கில் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் நடிதது தமிழிலும், தெலுங்கிலும் ஒரு சேர எடுக்கப்பட்ட படம்.


கதை ஒன்றும் பெரிசாக இல்லை. வழ்க்கம போல கஜினி மெமரி லாஸ் கதைதான். என்ன கஜினியில் 15 நிமிடம் என்றால் இதில் ராத்திரி தூங்கி எழுந்தால் முதல் நாள் நடந்தது தெரியாது. தினமும் அன்றைய நிகழ்ச்சிகளை, அவனை பற்றிய விவரங்களை டேப் ரிக்கார்டரில் போட்டு கேட்டு வாழ்கையை நடத்துபவ்ன், மிகப் பெரிய கோடீஸ்வரன். அவனுடய காதலி ரியா சென். அவனுக்கு ஞாபக சக்தி வரும் வரை தன் கண் எதிரே வைத்து பார்த்து கொள்ள அவனுக்கு ஒரு மேனேஜர் வேலையில் அமர்த்தில் தன் கண்காணிப்பில் கவனித்து வருபவர் சித்தப்பா நாசர். அவர் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைபழி மனோஜ் மீது விழுகிறது. சினேகா உல்லால்.. ஐ.பி.எஸ் ஆபீசராக வருகிறார்.



ப்ளாஷ் பேக்கில் மனோஜும், சினேகா உல்லாலும் காதலர்கள். மனோஜுக்கு ஞாபக சக்தி போனது எப்படி? மீண்டும் ஞாபகசக்தி திரும்பியதா..? கொலை பழியிலிருந்து தப்பித்தானா..? சித்தப்பா நாசரை கொன்றவர் யார்..? மனோஜ் எந்த காதலியுடன் சேர்ந்தான்..? என்ற பல கேள்விகளூக்கு போரடிக்காமல் விடை சொல்கிறார்கள்.




மிக ஸ்டைலிஷாக படமெடுத்திருக்கிறார்கள். மனோஜின் நடிப்பு ஒன்றும் குறை சொல்ல முடியாது. நன்றாக ஆடுகிறார், ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார், படம் நெடுகிலும் சல்மான்கான் போல தன் முறுக்கேறிய உடம்பை காட்டி கொண்டேயிருக்கிறார். படம் பூராவும் அவர் தன்னை பற்றியும், கூட நடிப்பவர்களை பற்றியும் அடிக்கும் கமெண்டுகள் இன்ட்ரஸ்டிங்.. ஆதி என்கிற அவரது கேரக்டருக்கு குரல் கொடுத்தவர் யாரோ.. நல்ல வாய்ஸ்

அருமையான ஒளிப்பதிவு.. அதிலும் மனோஜை ரவுடிகள் துரத்தி வரும் சேஸிங் காட்சியில் ஒளிப்பதிவு, எடிட்டிங், எல்லாமே சூப்பரோ சூப்பர். அந்த சேஸிங் காட்சியை ஏதோ ஒரு ப்ரஞ்சு படத்தில் அப்படியே பார்த்ததாய் ஞாபகம். பெயர்தான் நினைவுக்கு வரவில்லை. இருந்தாலும் சூப்பர்.. அதை அப்படியே எடுப்பதற்காக நிறைய உழைத்திருக்கிறார்கள்.



பிரமானந்தத்தின் காமெடியில் ஒரே தெலுங்கு வாடை. ஒன்றும் எடுபடவில்லை. பல இடங்களில் புரியவில்லை..




தரனின் இசையில் மூன்று பாடல்கள் நன்றாய் இருக்கிறது. தண்ணி கருத்துருக்கு ரீமிக்ஸ் பாடலில் உள்ள சரக்கு அளவிற்கு விஷூவலாய் சரக்கு இல்லை. சிநேகா உல்லால், மனோஜின் லவ் ட்ராக்கில் அவர்களது பிரிவுக்கு வலுவான சம்பவஙகள் இருந்திருந்தால் திரைக்கதையில் ஒரு உற்சாகம் ஏற்பட்டிருக்கும். மிகவும் அமெச்சூர் தனமான காரணங்கள். இயக்குனர் அனில் சாஸ்திரி ஸ்டைலாய் படமெடுக்க முனைந்த முனைப்பில் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் படத்துக்கு மெருகு கூடியிருக்கும்

என்னை தெரியுமா - அறிந்தவன்.

முன்னணி நடிகை அனுஷ்கா மீது நிலமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்-தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. தமிழில் 'இரண்டு' எனும் படத்தில் சுந்தர் சியால் அறிமுகமான இவர், வேட்டைக்காரன், சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இப்போது, வானம், தெய்மகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2006-ம் ஆண்டு விசாகப்பட்டினம் புறநகர்ப் பகுதியில் நிலம் ஒன்றை புரோக்கர்கள் மூலம் வாங்கினார். அமெரிக்காவில் வசிக்கும் லிங்கமூர்த்தி என்பவருக்கு சொந்தமான அந்த நிலத்தை புரோக்கர்கள் போலி ஆவணம் தயாரித்து விற்றுள்ளனர். இது தெரியாமல் அவர் நிலத்தை வாங்கி உள்ளார். 

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ஊர் திரும்பிய லிங்கமூர்த்தி தனது நிலத்தை போலி ஆவணம் மூலம் அனுஷ்கா வாங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் டீமேலி நீதிமன்றத்தில் அனுஷ்கா மீது நில மோசடி வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதி மிஸ்ரா நடிகை அனுஷ்கா நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 28-ந்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார்.

டிசம்பர் 10ல் ரஜினி-லதா தம்பதிக்கு அறுபதாம் கல்யாணம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் வருகிற 10ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடக்கிறது.


ரஜினிக்கு வருகிற 12ந் தேதி 60 வயது முடிவடைந்து, 61-வது வயது பிறக்கிறது. இதையொட்டி அவருக்கும், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் செய்து வைக்க அவரது மகள்கள் மருமகன்கள் மற்றும் உறவினர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

அதன்படி, ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் தம்பதியின் அறுபதாம் கல்யாணம் வருகிற 10ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை போயஸ்க கார்டனில் உள்ள அவர்களின் வீட்டில் நடக்கிறது.

அன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. புரோகிதர்கள் மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, ரஜினிகாந்துக்கும் லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் நடக்கிறது. இந்த விழாவில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.

டிசம்பர் 15 முதல் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா!

சென்னை: எட்டாவது சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. 

டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவை, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைக்கிறார்.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ், பிலிம் சேம்பர், ஐநாக்ஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. 

துருக்கி, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், தமிழில் நந்தலாலா, அங்காடித் தெரு உட்பட 12 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட திரையரங்க வளாகங்களில் சினிமா குறித்த விவாதங்களும் நடைபெறுகின்ரன.

அனைத்துப் படங்களையும் பார்ப்பதற்கு சிறப்பு நுழைவுச் சீட்டு 500 விலையில், பிலிம் சேம்பரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் எஸ்வி சேகர், நடிகைகள் சுஹாஸினி மற்றும் ரேவதி ஆகியோர் பங்கேற்று இந்த விழா குறித்து விரிவாகப் பேசினர்.

திரைப்பட விழா குழுவைச் சேர்ந்த சந்தானம், தங்கராஜ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

13 புதுமுகங்களுடன் களமிறங்கும் செல்வா!

நான் அவனில்லை படத்துக்குப் பிறகு 13 புதுமுகங்களுடன் களமிறங்குகிறார் இயக்குநர் செல்வா.

நாங்க என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை நிகழ்காலத்தில் துவங்கி எண்பதுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.


இந்த 13 பேரில் 5 பேர் இந்தப் படத்தின் ஹீரோக்கள். நான்கு ஹீரோயின்கள், இரண்டு வில்லன்கள், இரண்டு காமெடியன்கள்.

இதுகுறித்து செல்வா கூறுகையில், "புதியவர்களை அறிமுகப்படுத்துவது எனக்குப் புதிதில்லை. அமராவதியில் அஜீத்தை அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து தொடர்கிறது. இப்போது அறிமுகமாகவிருக்கும் 13 பேருமே இதே துறையைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது", என்கிறார்.

இந்தப் படம் செல்வாவின் 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 7, 2010

ஆதரவாளருக்கு ஜாமீன்: நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம்

சென்னை: மருத்துவக் கல்லூரியில் போலி மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவருக்கும், அவரது தந்தைக்கும் ஜாமீன் வழங்கக் கூறி மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நீதிமன்றத்திலேயே தெரிவித்து பரபரப்பை ஏற்படு்த்தினார்.


ஆனால், அந்த அமைச்சர் யார் என்பது குறித்து அப்போது விவரம் தெரிவிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இந் நிலையில் அந்த அமைச்சர் ராசா தான் என்று இன்று சென்னை உயர் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பு படித்து வருபவர் கிருபா ஸ்ரீதர். இவரது தந்தை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.

கடந்த இரு வருடங்களாக தேர்வில் தொடர்ந்து தோல்வியுற்று வந்துள்ளார் ஸ்ரீதர். இந் நிலையில் அவரும் அவரது தந்தையும் சேர்ந்து, ஒவ்வொரு பாடத்திலும் கூடுதல் மார்க் வாங்குவதற்காக விடைத்தாள்களை மாற்றி பெரும் பிராடுத்தனம் செய்துள்ளனர்.

இது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதரும், அவரது தந்தையும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரகுபதி முன்னிலையி்ல விசாரணைக்கு வந்தது. அப்போது தனது கட்சிக்காரர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதில் தாமதம் செய்வதாகவும், அரசுத் தரப்பே ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ளதாகவும் அவர்களது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி ரகுபதி, உங்களது கட்சிக்காரர்கள் என்னை தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர். தன்னை மத்திய அமைச்சரின் நெருங்கிய நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய ஒரு வழக்கறிஞர், கிருபா ஸ்ரீதர் மற்றும் அவரது தந்தை டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார். இது முறையற்றது.

அந்த மத்திய அமைச்சர் யார் என்பதை இப்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை. இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் நான் கடிதம் எழுத நேரிடும் என்றார் நீதிபதி ரகுபதி.

நீதிபதியின் இந்த பகிரங்க புகாரால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி எச்.எல். கோகலேவுக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பிய நீதிபதி ரகுபதி, இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறும் கோரினார்.

ஆனால், நீதிபதியையே மிரட்டிய அந்த மத்திய அமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. யார் என்பது தெரியாமலேயே இருந்து வந்தது.

நீதிபதியை மிரட்டியது ராசா தான் என்று அப்போதே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனாலும் சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

இந் நிலையில் நீதிபதியை மிரட்டிய அந்த அமைச்சர் சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்காக பதவி விலகிய ராசா தான் என்று உயர் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சந்திரமோகனுக்கு எதிராக நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் பார்கவுன்சில் தலைவர் பொறுப்பில் இருந்து சந்திரமோகனை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்.

இன்று நடந்த விசாரணையின்போது, நீதிபதி கலீபுல்லா கூறுகையில், கடந்த ஆண்டு நீதிபதி ரகுதியை மிரட்டியது சந்திரமோகன் தான் என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். அமைச்சராக இருந்த ராசாவின் பெயரைச் சொல்லி நீதிபதியை அவர் மிரட்டினார் என்றார்.

மேலும் தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்பில் இருந்து சந்திரமோகனை இடைநீக்கம் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து இந்திய பார் கவுன்சில் விசாரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.

மேலும் தனக்கு வந்த மிரட்டல் குறித்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு நீதிபதி ரகுபதி அனுப்பிய கடிதததையும் இன்று நீதிமன்றம் வெளியிட்டது.

அதில் நீதிபதி ரகுபதி கூறியிருப்பதாவது: ''கடந்த 12.06.2009ம் தேதி நான் எனது நீதிமன்ற அறையில் உணவருந்திக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு பார் கவுன்சிலின் தலைவரா சந்திரமோகன் அங்கு வந்து தனது மொபைல் போனை என்னிடம் தந்து, மத்திய அமைச்சர் உங்களுடன் பேச விரும்புகிறார் என்றார். ஆனால், நான் அவருடன் பேச மறுத்துவிட்டேன். சட்டப்படி தான் எல்லாம் நடக்கும் என்று கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

கிருபா ஸ்ரீதர், அவரது தந்தை டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்காக அந்த வழக்கில் ஆஜரானதும் சந்திரமோகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா மறுப்பு:

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ராஜா மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நான் எந்த நீதிபதியையும் மிரட்டவில்லை. என் சார்பில் நீதிபதியிடம் பேச யாருக்கும் நான் அனுமதி தரவில்லை. என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் கவலை தருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து நான் மீண்டு வருவேன் என்றார்

யாரையும் காப்பி அடித்து நடிக்க மாட்டேன்-கமல்ஹாஸன்

என்னையும் ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். யாரையும் காப்பி அடித்து நடிக்க மாட்டேன். எனக்கென்று தனித்துவம் உள்ளது என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

மன்மதன் அம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடந்தது. அந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு செய்த காட்சியை நேற்று பத்திரிக்கையாளர்களுக்காக போட்டுக் காட்டினர்.

அடையாறு பார்க் ஷெரட்டனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், நடிகை சங்கீதா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

'அப்போது ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி எந்திரன் படம் நடித்தார். இந்தியாவிலே பெரிய பட்ஜட் படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. அதே போல நீங்களும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் திட்டமுள்ளதா.. ஏற்கெனவே இதற்காக நீங்கள் முயற்சி எடுத்ததாகக் கூறுகிறார்களே?', என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள்.

இதற்கு கமல் பதில் கூறுகையில், "நான் யாரையும் காப்பி அடிப்பதில்லை. எனக்கென்று தனித்துவம் இருக்கிறது. நடிப்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டால், என் குரு சிவாஜியைத்தான் நினைப்பேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

என்னையும், ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். எங்களை நாங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை என்றும், சேர்ந்து நடிப்பதில்லை என்றும் பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துகொண்டோம். இளமை ஊஞ்சலாடுகிறது காலத்திலேயே இந்த முடிவை எடுத்துவிட்டோம்.

பட்ஜட்டுன்னு பார்த்தா, தசாவதாரம் பெரிய பட்ஜெட் படம்தான். அதேபோல் இந்த மன்மதன் அம்பும் பெரிய பட்ஜெட் படம்தான்...," என்றார்.

56 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறீர்களே, தங்கபஸ்பம் சாப்பிடுகிறீர்களா?, என்று ஒருவர் கேள்வி எழுப்ப,

"வயதை பற்றி பேசக் கூடாது. இளமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலே இளைமைதான். எல்லோரும் மூன்று வேளை சாப்பிடுவது மாதிரி நானும் மூன்று வேளை சாப்பிடுகிறேன். தங்க பஸ்பம் எதுவும் சாப்பிடுவதில்லை. தங்கபஸ்பம் சாப்பிடுகிற அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தால், அதையும் சினிமாவிலேயே போட்டிருப்பேன்..." என்றார்.

சினிமாவுக்கு ஒத்திகை அவசியமா? என்று கேட்டதற்கு, "5 லட்சம் செலவில் நடைபெறும் நாடகத்துக்கே ஒத்திகை தேவைப்படும்போது, 50 கோடி செலவில் தயாரிக்கும் சினிமாவுக்கு ஒத்திகை அவசியம் இல்லையா? சினிமாவுக்கு ஒத்திகை பார்ப்பது, என் கண்டுபிடிப்பு அல்ல. மாடர்ன் தியேட்டர்ஸ் காலத்திலேயே ஒத்திகை இருந்தது. ஒத்திகை பார்ப்பதற்கு என்றே அந்த ஸ்டூடியோவில், மிகப்பெரிய 'ஹால்' இருந்தது...", என்றார் கமல்.

மன்மதன் அம்பு படத்தின் படப்பிடிப்பை சொகுசுக் கப்பலில் படமாக்கப்பட்டது குறித்து கூறுகையி், மன்மதன் அம்பு' படத்தின் கதை, உல்லாசப்பயணம் சம்பந்தப்பட்டது. அதில் நான் முன்னாள் கமாண்டோவாக நடிக்கிறேன். அந்த படத்தின் கதைப்படி, கப்பல் தேவைப்பட்டது என்றார் கமல்.

மாதவன் தொடர்ந்து உங்களது படத்தில் நடிக்கிறாரே என்ற கேள்விக்கு, மாதவனுக்கும், எனக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதால்தான் என்றார்.

இனி நீங்கள் எழுதும் கதைகளில் மட்டுமே நடிப்பீர்களா என்ற ஒரு கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், நல்ல கதை யார் எழுதினாலும், அதில் நான் நடிப்பேன். உங்களிடம் நல்ல கதை இருந்தால், நான் நடிக்க தயார் என்றார் கமல்.

நமீதா முதுகில் 'டாட்டூ'!

பொதுவாக விழாக்கள், வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு எக்குத் தப்பான ட்ரஸ்ஸில் வந்து இதயத் துடிப்பை பதம் பார்ப்பது நமீதா வழக்கம். புகைப்படக்காரர்களின் கேமராக் கண்களுக்கோ பெரும் விருந்து வைப்பார்.

ஆனால் நேற்று நடந்த இளைஞன் பட விழாவுக்கு வந்திருந்த அவரைப் பார்த்த புகைப்படக்காரர்களுக்கு அதிர்ச்சி, காரணம், முழுக்க கருப்புப் புடவையில் வந்திருந்தார். இன்னிக்கு நமீதா தரிசனம் அவ்வளவுதானா... என்று ஏமாற்றத்துடன் கமெண்ட் அடித்தவர்களுக்கு அடுத்த நொடியே இன்னொரு ஷாக் கொடுத்தார் நமீதா. இந்த முறை இன்ப அதிர்ச்சி... முன்பக்கம் முழுசாக மூடிக் கொண்டிருந்த நமீதா, முதுகுப் பக்கத்தை கிட்டத்தட்ட முழுசாகவே திறந்து வைத்து 70 எம்எம் ஷோ காட்ட, கிளிக்கித் தள்ளினார்கள் அனைவரும்.

இதில் பலரும் கவனித்த சமாச்சாரம், நமீதாவின் பின்கழுத்திலிருந்து முதுகு வரை நீண்டிருந்த டாட்டூ. இந்த கறுப்பு நிற டாட்டூவை அவர் பெங்களூரில் குத்திக் கொண்டாராம். பார்க்க செம கவர்ச்சியாக இருக்கிறது என பலரும் கூறியதால், இப்போது வேறு சில கவர்ச்சிப் பிரதேசங்களிலும் குத்திக் கொள்ளப் போகிறாராம் டாட்டூவை.. அதாவது முன் கழுத்து, தோள் பட்டையில்!!

த்ரிஷா ஏற்கெனவே கழுத்துக்குக் கீழே டாட்டூ குத்திக் கொண்டுள்ளார். இப்போது நமீதா பேக் சைடில் குத்தியுள்ளார்.

நல்லாத்தானே போய்ட்டிருக்கு...!

புது நடிகைகளில் டாப் ஹீரோக்களின் சாய்ஸ் அமலா பால்!

புதிய நாயகிகளில் இப்போது அதிக படங்களை வைத்திருப்பவர் அமலா பால் என்ற அனகா. முன்னணி நடிகர்களும் முதல் சாய்ஸ் அவர்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

கேரளத்தைச் சேர்ந்த அமலா நடித்த முதல் படம் சிந்து சமவெளி. மாமனாருடன் கள்ளத் தொடர்பு கொள்ளும் விவகாரமான பாத்திரம் அது. கொஞ்சம் பேர் பாராட்டினார்கள். நிறைய பேர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

அடுத்து வந்த படம் மைனா. முதல் படத்தில் வாங்கிக் கட்டியதற்கெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில் நல்ல பெயர் கிடைத்தது. 

இதன் விளைவு, நயன்தாரா, த்ரிஷா ரேஞ்சுக்கு பேசுகிறார்கள் அமலாவை. 

விக்ரமின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடி அமலாதான். லிங்குசாமி இயக்கும் படம், ஆர்யா - மாதவன் நடிக்கும் வேட்டை என பெரிய படங்கள் அமலாவின் கைவசம். மேலும் இரு பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்க பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போதே பெரிய பட வாய்ப்புகள் வந்துவிட்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நிச்சயம் பேரைக் காப்பாற்றிக் கொள்வேன்", என்றார்.

வரைமுறையற்ற வன்முறை... மக்களை ஓட வைத்த ரத்த சரித்திரம்!

பொதுவாக மக்கள் படங்களை ஓட வைப்பார்கள். ஆனால் இப்போது ஓரு படம் மக்களை ஓட வைத்திருக்கிறது அரங்குகளை விட்டு. அது ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திரம்!

வரைமுறையற்ற வன்முறை, கோரமான ரத்தம் தெறிக்கும் காட்சிகள், தமிழகத்துக்கு அந்நியமான கதைக்களம் போன்றவற்றால், சமீபத்தில் வெளியான வேறு எந்தப் படமும் காணாத படுதோல்வியைச் சந்தித்துள்ளது ரத்த சரித்திரம்.


ஆந்திர அரசியல் தாதாக்களின் நிஜக் கதையை மையப்படுத்தி ராம் கோபால் வர்மா தயாரித்து இயக்கி, தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் வெளியிட்ட படம் ரத்த சரித்திரம். இதில் விவேக் ஓபராய், சூர்யா மற்றும் ப்ரியாமணி நடித்திருந்தனர்.

ஹிந்தி, தெலுங்கில் இரு பகுதிகளாக தயாரான இந்தப் படம், தமிழில் ஒரே பாகமாக வெளியானது.

கடந்த வெள்ளியன்று வெளியான இந்தப் படத்துக்கு ஆரம்ப நாளிலிருந்தே சுத்தமாகக் கூட்டமில்லை. 30 சதவீத டிக்கெட்டுகள் கூட சில திரையரங்குகளில் விற்பனையாகவில்லை. சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள காசி திரையரங்கில் வெகு சிலர் மட்டுமே படம் பார்க்க வந்திருந்தனர் நேற்று.

இதற்கு கடும் மழைதான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதே மழை நாளில், மைனா படத்துக்கு ஓரளவு கூட்டம் திரண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"மிக மோசமான காட்சிகள், அளவுக்கதிகமான வன்முறை, கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலும் தெறிக்கும் ரத்தம், தரமற்ற ஒளிப்பதிவு, காதைப் பிளக்கும் இரைச்சல்... இவை இந்தப் படத்தின் மீதே வெறுப்பைக் கிளப்பிவிட்டன. இதைவிட முக்கியம், ஆரம்பத்திலிருந்தே இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வில் மக்கள் இருந்துவிட்டதுதான்..." என்கிறார் விநியோகஸ்தர் ஒருவர்.

ராம் கோபால் வர்மாவே, தமிழ் ரசிகர்களுக்கு அநேகமாக இந்த டேஸ்ட் பிடிக்காது என நினைக்கிறேன் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தை விநியோகித்த க்ளவுட் நைன் தயாநிதி அழகிரிக்கு மீண்டும் ஒரு படம் நடித்துத் தர ஒப்புக் கொண்டிருக்கிறாராம் சூர்யா. நஷ்டஈடு?!

Saturday, December 4, 2010

300 மூட்டை அரிசி தானம் செய்து ட்ரைலர் வெளியிட்ட விஜய்!

தனது அடுத்த படமான காவலன் ட்ரைலர் வெளியீட்டு விழாவை ஏழைகளுக்கு உதவும் வகையில் இன்று நடத்தினார் நடிகர் விஜய்.

ட்ரைலர் வெளியீட்டையொட்டி 300 ஏழைக் குடும்பங்களுக்கு 300 மூட்டை அரிசி தானம் செய்தார்.

விஜய் நடித்த காவலன் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், ஏழைகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் வடபழனி ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடந்தது.

விழாவில் விஜய் பங்கேற்று 300 ஏழை குடும்பங்களுக்கு 300 மூட்டை இலவச அரிசி வழங்கினார். காவலன் பட டிரைலரையும் வெளியிட்டார். விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷக்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய விஜய், "காவலன் பட டிரைய்லர் வெளியிட அழைத்ததும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. பட டிரெய்லர் விழாவுக்கு செலவிடும் தொகையை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்யலாம் என்று தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரத்திடம் கூறினேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று, ஷக்தி சிதம்பரம் ஏழைகளுக்கு இலவச அரிசி கொடுக்க சம்மதித்தார். அதோடு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவையும் நடத்துவதாக கூறியதால், விழாவுக்கு வர சம்மதித்தேன் என்றார்.

விழாவில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், மேனேஜர் மற்றும் பிஆர்ஓ பிடி செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியையொட்டி ஜேஎஸ் திருமண மண்டபத்தையொட்டியுள்ள இடங்களில் விஜய்யின் பெரிய பெரிய கட் அவுட்டுகள், சாரட் வண்டியில் விஜய் பயணிப்பது போன்ற அட்டை பொம்மை போன்றவற்றை வைத்திருந்தனர்.

மன்மதன் அம்பு.. என்ன பட்ஜெட்?

மன்மதன் அம்பு படத்தின் பட்ஜெட் என்ன என்ற கேள்விக்கு கடைசி வரை தயாரிப்பாளரும் படத்தின் ஹீரோவும் மழுப்பலாகவே பதில் கூறினர்.

இந்தப் படம் ரூ 45 கோடியில் எடுக்கப்படுவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.

சொகுசு கப்பலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. கமல் ஹாஸனுக்கு சம்பளம், மாதவன், த்ரிஷா சம்பளம் என எப்படிப் பார்த்தாலும் ரூ 40 கோடிக்குள் இந்தப் படம் முடிந்துவிட்டிருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இன்று சென்னையில் நடந்த மன்மதன் அம்பு பிரஸ் மீட்டில் இதுகுறித்து கமல் ஹாஸனிடம் கேட்கப்பட்டது. அவர் நேரடியாக பதில் அளிக்காமல், ஐந்து விரல்களை மடக்கிக் காட்டி 50 ரூபாய் என்றார்.

அதாவது ஐம்பது கோடியாம்!

இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். ஆனால் விநியோக உரிமையை ஜெமினிக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 17-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது இந்தப் படம். மன்மதன் அம்புடன் மோதவிருப்பது விஜயகாந்தின் விருதகிரி!!

கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்?


ஷங்கரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்திலிருந்து நடிகர் விஜய் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

ஜெமினி நிறுவனம் தயாரிக்கவிருந்த ரீமேக் படம் இது. ஷங்கர் தனது கேரியரில் முதன்முதலில் இயக்கும் ரீமேக்கும் இதுவே.

தமிழில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பதாகக் கூறப்பட்டது. தெலுங்கில் விஜய் வேடத்தில் மகேஷ்பாபு நடிப்பார் எனவும் அந்தப் படத்துக்கு தலைப்பு 3 ராஸ்கல்ஸ் என்றும் அறிவித்திருந்தனர்.

படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் துவங்குவதாக இருந்த நிலையில், இந்த பரபரப்பு எழுந்துள்ளது.

விஜய் இப்போது நடித்துவரும் வேலாயுதம் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம். ஆனால் அதற்குள் 3இடியட்ஸை துவங்குவதில் ஷங்கர் உறுதியாக உள்ளாராம்.

வேலாயுதம் படம் முடியும் முன்பே 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதாம். எனவே இந்தப் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று விஜய் கூறிவிட்டதாகவும், ஷங்கரும் அவரும் நண்பர்களாகப் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்போது விஜய்க்கு பதில் புதிய நாயகனைத் தேடுகிறார்கள் ஷங்கரும் ஜெமினி நிறுவனத்தினரும்...

Friday, December 3, 2010

மன்மதன் அம்பு... அமெரிக்க உரிமை ரூ 3 கோடிக்கு விற்பனை!

கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு திரைப்படத்தின் அமெரிக்க உரிமை ரூ 3 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

கமல் படங்களுக்கு வெளிநாடுகளில் ஓபனிங் என்பது தசாவதாரம் வரை இல்லாமல் இருந்தது. தசாவதாரத்துக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உன்னைப் போல் ஒருவனும் வெளிநாடுகளில் ரிலீசானது.

இப்போது மன்மதன் அம்பு படத்தின் அமெரிக்கா மற்றும் கனடா உரிமா ரூ 3 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. கமல் படங்களைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய விலையாகும். இதற்கு முன் அவரது தசாவதாரத்துக்கு ரூ 1.5 கோடி தரப்பட்டது. 

கே எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல்-த்ரிஷா-மாதவன்-சங்கீதா-ஓவியா நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் வெளிநாட்டு நடிகையும் நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு - இயக்குநர் கே நட்ராஜ் மகள் திருமணம்: ரஜினி வாழ்த்து

ரஜினியின் நண்பரும் இயக்குநருமான நடராஜின் மகள் ரஜினிக்கும் வெண்ணிலா கபடிக் குழு ஹீரோ விஷ்ணுக்கும் நேற்று திருமணம் [^]நடந்தது.

ரஜினி நேரில் போய் மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களான அன்புள்ள ரஜினிகாந்த் [^] , வள்ளி போன்ற படங்களை இயக்கியவர் கே நட்ராஜ். பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்.

தங்களின் ஆழ்ந்த நட்பை வெளிக்காட்டும் வகையில், தன் மகளுக்கு ரஜினி என்றே பெயர் சூட்டினார் நட்ராஜ்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் ஹீரோவும், பிரபல காவல்துறை உயர் அதிகாரி ரமேஷ் குடாவ்லாவின் மகனுமான விஷ்ணுவுக்கும் ரஜினிக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் நேற்று பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடந்தது. ரஜினி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்தார்.

டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட ஏராளமான உயர் போலீஸ் [^] அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரஜினியின் நண்பரும் இயக்குநருமான நடராஜின் மகள் ரஜினிக்கும் வெண்ணிலா கபடிக் குழு ஹீரோ விஷ்ணுக்கும் நேற்று திருமணம் [^]நடந்தது.

ரஜினி நேரில் போய் மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களான அன்புள்ள ரஜினிகாந்த் [^] , வள்ளி போன்ற படங்களை இயக்கியவர் கே நட்ராஜ். பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்.

தங்களின் ஆழ்ந்த நட்பை வெளிக்காட்டும் வகையில், தன் மகளுக்கு ரஜினி என்றே பெயர் சூட்டினார் நட்ராஜ்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் ஹீரோவும், பிரபல காவல்துறை உயர் அதிகாரி ரமேஷ் குடாவ்லாவின் மகனுமான விஷ்ணுவுக்கும் ரஜினிக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் நேற்று பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடந்தது. ரஜினி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்தார்.

டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட ஏராளமான உயர் போலீஸ் [^] அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தன் வாழ்க்கையை படமாக்கும் ஷகிலா!



தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாவாக எடுக்கிறார் கவர்ச்சி நடிகை ஷகிலா. 

தமிழில் காமெடி நடிகையாக அறிமுகமாகி, பின்னர் மலையாளத்தில் கவர்ச்சி பாமாக மாறி கலக்கியவர் ஷகிலா.

பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவரது படங்கள் மோகன்லால், மம்முட்டி படங்களை விட அதிக நாட்கள் ஓடி பரபரப்பு ஏற்படுத்தின.

இவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். ஆனால் திருமணம் நடக்கவில்லை. மிகுந்த ஏமாற்றமடைந்தார்.

இந்த நிலையி ஷகிலா தனது வாழ்க்கையை படமாக்க முடிவு செய்துள்ளார். இதற்கான கதையை அவரே எழுதியுள்ளார். இப்படத்தை எஸ்.பி.ஆர். ராஜா என்பவர் இயக்குகிறார். இவர் பயணங்கள் தொடரும் என்ற படத்தை இயக்கியவர். தெலுங்கிலும் பல படங்கள் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றப் போகிறாராம் ஷகிலா. 

இது பற்றி ஷகிலா கூறுகையில், "சினிமா இயக்குநராக வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. என் வாழ்வில் நடந்த கசப்பான மற்றும் சந்தோஷமான சம்பவங்களையே கதையாக உருவாக்கியுள்ளேன். அதைப் படமாக எடுக்க உள்ளேன். இந்த படத்தில் நானே கதாசிரியராக இருப்பது மகிழ்ச்சி. எஸ்.பி.ஆர். ராஜா இயக்குகிறார். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றுவேன்.

நடிகர், நடிகை தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் துவங்க திட்ட மிட்டுள்ளோம்.

இதற்கு அடுத்த படத்தை நானே இயக்கவும் முடிவு செய்துள்ளேன்..," என்றார்.

Google Custom Search