Wednesday, December 8, 2010

என்னை தெரியுமா - அறிந்தவன்

குறுகிய காலத்தில் 75,000 ஹிட்ஸுகளை கொடுத்து, மேலும் ஆதரிக்கும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றிகள் பல கோடி..



தெலுங்கில் 'நேநு மீக்கு தெலுசா" என்கிற பெயரில் 2008 அக்டோபரில் வெளிவந்த படம். தெலுங்கில் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் நடிதது தமிழிலும், தெலுங்கிலும் ஒரு சேர எடுக்கப்பட்ட படம்.


கதை ஒன்றும் பெரிசாக இல்லை. வழ்க்கம போல கஜினி மெமரி லாஸ் கதைதான். என்ன கஜினியில் 15 நிமிடம் என்றால் இதில் ராத்திரி தூங்கி எழுந்தால் முதல் நாள் நடந்தது தெரியாது. தினமும் அன்றைய நிகழ்ச்சிகளை, அவனை பற்றிய விவரங்களை டேப் ரிக்கார்டரில் போட்டு கேட்டு வாழ்கையை நடத்துபவ்ன், மிகப் பெரிய கோடீஸ்வரன். அவனுடய காதலி ரியா சென். அவனுக்கு ஞாபக சக்தி வரும் வரை தன் கண் எதிரே வைத்து பார்த்து கொள்ள அவனுக்கு ஒரு மேனேஜர் வேலையில் அமர்த்தில் தன் கண்காணிப்பில் கவனித்து வருபவர் சித்தப்பா நாசர். அவர் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைபழி மனோஜ் மீது விழுகிறது. சினேகா உல்லால்.. ஐ.பி.எஸ் ஆபீசராக வருகிறார்.



ப்ளாஷ் பேக்கில் மனோஜும், சினேகா உல்லாலும் காதலர்கள். மனோஜுக்கு ஞாபக சக்தி போனது எப்படி? மீண்டும் ஞாபகசக்தி திரும்பியதா..? கொலை பழியிலிருந்து தப்பித்தானா..? சித்தப்பா நாசரை கொன்றவர் யார்..? மனோஜ் எந்த காதலியுடன் சேர்ந்தான்..? என்ற பல கேள்விகளூக்கு போரடிக்காமல் விடை சொல்கிறார்கள்.




மிக ஸ்டைலிஷாக படமெடுத்திருக்கிறார்கள். மனோஜின் நடிப்பு ஒன்றும் குறை சொல்ல முடியாது. நன்றாக ஆடுகிறார், ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார், படம் நெடுகிலும் சல்மான்கான் போல தன் முறுக்கேறிய உடம்பை காட்டி கொண்டேயிருக்கிறார். படம் பூராவும் அவர் தன்னை பற்றியும், கூட நடிப்பவர்களை பற்றியும் அடிக்கும் கமெண்டுகள் இன்ட்ரஸ்டிங்.. ஆதி என்கிற அவரது கேரக்டருக்கு குரல் கொடுத்தவர் யாரோ.. நல்ல வாய்ஸ்

அருமையான ஒளிப்பதிவு.. அதிலும் மனோஜை ரவுடிகள் துரத்தி வரும் சேஸிங் காட்சியில் ஒளிப்பதிவு, எடிட்டிங், எல்லாமே சூப்பரோ சூப்பர். அந்த சேஸிங் காட்சியை ஏதோ ஒரு ப்ரஞ்சு படத்தில் அப்படியே பார்த்ததாய் ஞாபகம். பெயர்தான் நினைவுக்கு வரவில்லை. இருந்தாலும் சூப்பர்.. அதை அப்படியே எடுப்பதற்காக நிறைய உழைத்திருக்கிறார்கள்.



பிரமானந்தத்தின் காமெடியில் ஒரே தெலுங்கு வாடை. ஒன்றும் எடுபடவில்லை. பல இடங்களில் புரியவில்லை..




தரனின் இசையில் மூன்று பாடல்கள் நன்றாய் இருக்கிறது. தண்ணி கருத்துருக்கு ரீமிக்ஸ் பாடலில் உள்ள சரக்கு அளவிற்கு விஷூவலாய் சரக்கு இல்லை. சிநேகா உல்லால், மனோஜின் லவ் ட்ராக்கில் அவர்களது பிரிவுக்கு வலுவான சம்பவஙகள் இருந்திருந்தால் திரைக்கதையில் ஒரு உற்சாகம் ஏற்பட்டிருக்கும். மிகவும் அமெச்சூர் தனமான காரணங்கள். இயக்குனர் அனில் சாஸ்திரி ஸ்டைலாய் படமெடுக்க முனைந்த முனைப்பில் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் படத்துக்கு மெருகு கூடியிருக்கும்

என்னை தெரியுமா - அறிந்தவன்.

No comments:

Post a Comment

Google Custom Search