Saturday, January 29, 2011

ரஜினி ஜோடி தீபிகா - அனுஷ்கா!

ராணா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் தீபிகா நடிப்பார்கள் என்று தெரிகிறது.

சுல்தான் தி வாரியர் என்ற பெயரில் சௌந்தர்யா ரஜினி எடுத்து வந்த படம் கைவிடப்பட்டுள்ளது. இப்போது கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் புத்தம் புதிதாக ஒரு படத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதில் அனிமேஷன் சமாச்சாரங்கள் இல்லை என்றும், படையப்பா மாதிரி முழு நீள ரஜினி படம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்படத்தில் ரஜினி 3 வேடங்களில் நடிக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் பாணி படமாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ராணா உருவாகிறது. ரஜினிக்கு இதில் இரண்டு ஜோடிகள். தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோர் நாயகிகளாக நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ரஜினியின் மக்கள் தொடர்பாளரும், ராணாவின் மக்கள் தொடர்பாளர்களில் ஒருவருமான ரியாஸ் கூறுகையில், "இந்த இரு நாயகிகளுடனும் பேசி வருகிறோம். விரைவில் செய்தியை அறிவிப்போம்", என்றார்.

ரஜினியுடன் நடிக்க வந்துள்ள இந்த பெரிய வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதால், கால்ஷீட் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருகிறாராம் தீபிகா படுகோன்.

'நடித்தால் இனி ரஜினியுடன்தான்... வேறு தமிழ் ஹீரோக்களுக்கு இப்போதைக்கு கால்ஷீட் தரும் ஐடியா இல்லை' என ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்தவர் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது!

ரஜினியின் அடுத்த படம் ராணா... மூன்று வேடங்களில் நடிக்கிறார்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர், ராணா. இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி.

முத்து, படையப்பா ஆகிய மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இந்தப் படத்தில் கைகோர்க்கிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் மற்றொரு செய்தி, இந்த ராணா, அனிமேஷன் படம் அல்ல… 100 சதவீத பொழுதுபோக்குகள் நிறைந்த பக்கா ரஜினி படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய வெளிநாட்டுப் பதிப்புகளாக வெளியாகிறது.

எந்திரன் தயாரிப்பு வாய்ப்பை நழுவவிட்ட ஈராஸ் என்டர்டெயின்மெண்ட், இந்த முறை பெரும் பொருட்செலவில், சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவின் துணை நிறுவனமான ஹரா பிக்சர்ஸுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட எந்திரன் குழு அப்படியே இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறது.

ரத்னவேல் ஒளிப்பதிவை கவனிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தொகுப்புக்கு ஆன்டனி, கலை இயக்கத்தை ராஜீவன் என முன்னணி கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

ரஜினி ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனை அணுகியுள்ளனர்.

மூன்று முகம், ஜான் ஜானி ஜனார்தன் படங்களுக்குப் பிறகு ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் படம் ‘ராணா’தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவதார் போல இந்தப் படம் இருக்கும் என ரஜினியே முன்பு பேட்டியில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

இந்தப் படம் குறித்து ஈராஸ் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், “இந்திய சினிமாவின் நிகரில்லாத சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முற்றிலும் வித்தியாசமான, முழு நீள ரஜினி படமாக ராணா உருவாகிறது. இந்திய சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைத் தரும்…”, என்றார்.

ராணாவின் தொழில் நுட்ப இயக்குநர் என்ற புதிய பொறுப்பேற்றுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில், “ஈராஸ் நிறுவனத்துடன் இணைவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக ராணா அமையும்,” என்றார்.

ராணாவின் தொழில்நுட்பப் பணிகளை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஐக்யூப் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் கவனிக்கின்றனர். இந்த நிறுவனம் ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்காக எம்மி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

Thursday, January 27, 2011

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் விசிறிகள் பக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.

ஹேக் செய்தவர்கள் அதில் ஒரு செய்தியையும் விட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்தியைப் படித்து விட்டு 1, 800 பேர் விருப்பமும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது



பேஸ்புக்கில் புகுந்து ஹேக் செய்வது சகஜமாகி வருகிறது. ஏராளமான பிரபலங்களின் பக்கங்கள்தான் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றன. சமீபத்தில் கூட பிரான்ஸ் அதிபர் சார்கோசியின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தனர். அதில் சார்கோசி மறு தேர்தலை விரும்பவில்லை என்று எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்து, பேஸ் புக்குக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர் குசும்புக்கார ஹேக்கர்கள்.

சிம்புதேவனுடன் இணையும் தனுஷ்!

சன் டிவியின் மெகா விளம்பரங்கள் கூட தனுஷின் ஆடுகளத்தைக் காப்பாற்ற முடியவில்லை. நகரப் பகுதிகளில் வசூல் சுமார்... கிராமம் சார்ந்த திரையரங்குகள் பலவற்றில் படத்தை தூக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் தனது அடுத்த வெளியீடாக ரஜினி பட ரீமேக்கான 'மாப்பிள்ளையைக் களமிறக்கத் தயாராகிறார் தனுஷ். இதுவும் சன் பிக்சர்ஸ் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்குப் பிறகு ஹரியின் வேங்கை, சுப்பிரமணியன் சிவாவின் சீடன், செல்வராகவனின் இரண்டாம் உலகம் என வரிசையாக உள்ளன தனுஷ் படங்கள்.

இதற்கிடையே, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் தந்த சிம்பு தேவனுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போல இந்தப் படமும் பேண்டஸி கதைதானாம். இந்தப் படத்தைத் தயாரிக்க இரு பெரிய நிறுவனங்கள் முன்வந்துள்ளனவாம்.

இன்னொரு பக்கம், வெற்றி மாறன் 2012-ல் தயாரிக்கும் படத்திலும் தனுஷ் நடிக்கிறாராம்.

காவலன் 'சூப்பர் ஹிட்'!

பொங்கலுக்கு வந்த படங்களில் ஏகப்பட்ட சர்ச்சைகள் மற்றும் தடைகளைத் தாண்டி சூப்பர் ஹிட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விஜய் நடித்த காவலன்.

பொங்கலுக்கு காவலன் படம் வருமா? வராதா? என பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஒரு பக்கம் தியேட்டர்காரர்கள் பிரச்சினை செய்ய, மறுபக்கம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பின்வாங்க தட்டுத் தடுமாறி ரிலீஸ் செய்தனர் படத்தை.

ஆனால் இன்று படத்துக்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்களே, படம் குறித்து பாஸிடிவாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை முடிந்து இரண்டு வாரங்களாகும் நிலையில் படங்களின் வசூல் நிலவரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி விஜய்யின் காவலன்தான் இன்றைய தேதிக்கு முதலிடத்தில் உள்ளது. சென்னை போன்ற நகர்ப்புற திரையரங்குகளில் இப்போதும் ஓரளவுக்காவது ஆன்லைன் புக்கிங் இருப்பது காவலனுக்கு மட்டுமே. மற்ற படங்களைப் பொறுத்தவரை, காட்சி நேரத்தின் போதுதான் டிக்கெட் வாங்கவே வருகிறார்கள்.

குறிப்பாக வார இறுதி நாட்களில் காவலன் படம் கிட்டத்தட்ட ஹவுஸ்புல் என்ற நிலை. கிராமத்துப் பகுதிகளில் ரிலீசான பொங்கல் படங்களில் சிறுத்தையும், இளைஞனுக்கும் பெட்டிக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டன. ஆனால் காவலன் ஸ்டெடியாக உள்ளதாகவும், ஆடுகளம் இன்னும் சில தினங்கள் தாக்குப் பிடிக்கக் கூடும் என்றும் கோவை விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்

Wednesday, January 26, 2011

தெலுங்கில் ரீமேக்காகும் காவலன்-பெல்லம்கொண்டா சுரேஷிடம் உரிமை

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான பெல்லம்கொண்டா சுரேஷ் விஜய், அசின் நடித்துள்ள காவலன் படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளார்.

காவலன் திலீப், நயன்தாரா நடித்த பாடிகார்ட் என்னும் மலையாளப் படத்தின் ரீமேக் ஆகும். பாடிகார்ட் மற்றும் காவலன் படங்களை இயக்கியவர் சித்திக்.

காவலன் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக இல்லாத விஜய் படமாக இருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு. குறிப்பாக ரிப்பீட் ஆடியன்ஸ் வருகையால் படம் வெற்றிப் படமாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது காவலன் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதற்கான உரிமையை சுரேஷ் வாங்கியுள்ளார்.

படங்களை ரீமேக் செய்வதில் கில்லாடியான சுரேஷ் இன்னும் ஹீரோ, ஹீரோயினைத் தேர்வு செய்யவில்லை. இந்தப் படத்தையும் சித்திக் தான் இயக்குவாரா என்றும் தெரியவில்லை.

இதற்கிடையே, காவலன் வெற்றியைத் தொடர்ந்து பாடிகார்ட் படம் விரைவில் சல்மான் கானை வைத்து இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தையும் சித்திக் தான் இயக்குவார் என்றும் தெரிகிறது. அனேகமாக ஆசினே நாயகியாகவும் நடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் விருது-2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை

ஆஸ்கர் விருது ஜூரம் தீவிரமாகியுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர், 2 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை அவர் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளி சாதனை படைத்தார் ரஹ்மான். அவர் மட்டுமல்லாமல், குல்ஸார், ரசூல் பூக்குட்டி ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்தன.

இந்த நிலையில், ரஹ்மான் இசையமைப்பில், டேனி பாயில் இயக்கியுள்ள 127 ஹவர்ஸ் திரைப்படம் பல்வேறு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ரஹ்மானின் பெயர் மட்டும் 2 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த ஒரிஜினல் பாடல் (இஃப் ஐ ரைஸ்) ஆகிய இரு பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரையாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளுவாரா ரஹ்மான் என்ற எதிர்பார்ப்பு பெரிதாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில், அதிகபட்சமாக தி கிங்க்ஸ் ஸ்பீச் படம் மொத்தம் 12 பிரிவுகளில் பரிந்துரையைப் பெற்றுள்ளது. ட்ரூ கிப்ட் படம் 10 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

83வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.

140 தமிழ்ப் படங்களுக்கு மானியம்: ராம.நாராயணன் அறிவிப்பு

சென்னை: 2007-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஆண்டுக்கு 35 படங்கள் வீதம் மொத்தம் 140 படங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளுக்கான மானிய தொகை வழங்கி, தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தமிழக முதல்வர் [^] கருணாநிதி [^] க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் திரையுலகினரின் துன்பங்களை துடைத்து, இன்பம் சேர்க்கும் விதமாக, கடந்த 2007, 2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு தமிழக அரசின் மானிய தொகைக்கான விண்ணப்பம் அளிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான விண்ணப்பத்தை சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் ராம.நாராயணன் கூறியிருக்கிறார்.

பாபர் மசூதி கதை... கைவிட்டார் கமல் [^] !

சர்ச்சைகளை படமாக்குவது கமலுக்கு பிடித்தமான விஷயம். ஆனால் அதன் பின்விளைவுகளாகத் தொடரும் கலாட்டாக்களை நினைத்து இப்போது பின்வாங்க ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது. 


அதிலும் தனது மன்மதன் அம்பு பாடலுக்கு கிடைத்த 'மரியாதை' அவரை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டது போலிருக்கிறது.

ஹேராம், விருமாண்டிக்குப் பிறகு தானே இயக்கப் போகும் தனது அடுத்த படத்தின் கதைக் களமாக கமல் தேர்வு செய்தது பாபர் மசூதி இடிப்பு சம்பவம் [^] மற்றும் அதன் பின் விளைவுகளைத்தான்.

ஆனால், சர்ச்சைகளைத் தவிர்க்க, இந்தக் கதையைப் படமாக்குவதைத் தவிர்த்தேன் என்று அவர் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கான கதை விவாதமெல்லாம் முடிந்த நிலையில், இப்படியொரு படம் [^] எடுத்தால் ஏற்படப் போகும் விவாதங்கள், விமர்சனங்கள் மற்றும் கலாட்டாக்களை நினைத்து கைவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கமல் கூறுகையில், "பாபர் மசூதி கதை பலத்த சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் அப்படம் எடுப்பதை கைவிட்டு விட்டேன். அதற்காக நான் பயந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை...", என்றார்.

Monday, January 24, 2011

மலையாளத்தில் 'மாமனாராகும்' பாக்யராஜ்!

தமிழ் சினிமாவின் சாதனை இயக்குநர்களில் ஒருவரான கே பாக்யராஜ், முதல் முதலாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்கப்போகிறார்.

பாக்யராஜ் படங்கள் கேரளாவில் ரொம்ப பாப்புலர். அந்தப் பாப்புலாரிட்டியின் விளைவுதான், மலையாள இயக்குநர் பாலச்சந்திர மேனனுக்கு மலையாள பாக்யராஜ் என்று பெயர் சூட்ட வைத்தது. 

தமிழில் பாக்யராஜ் படுபிஸியாக இருந்த காலத்தில் அவருக்கு நிறைய மலையாளப் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது அவர் எதையும் ஏற்கவில்லை. இப்போது அவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

திலீப் ஹீரோவாக நடிக்கும் மிஸ்டர் மருமகன் என்ற படத்தில் மாமனார் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் பாக்யராஜ். 

சந்தியா மோகன் இயக்கும் இந்தப் படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார் ரோஜா.


விநியோகஸ்தரானார் இளையராஜா!

ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. பாவலர் கிரியேஷன்ஸ் மற்றும் இளையராஜா மூவீஸ் சார்பில் அவர் தயாரித்தவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள். முதல் தரமானவையும்கூட. வெற்றியின் உச்சம் என்றால் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராஜாதி ராஜா எனலாம். 

ஆனால் சில ஆண்டுகளாக தயாரிப்பை நிறுத்தி வைத்துவிட்ட ராஜா, மீண்டும் தயாரிப்புப் பணிகளில் இறங்க முடிவு செய்திருக்கிறார். அமிதாப்பின் பா பட உரிமை கூட அவரிடம்தான் உள்ளது.

இந்த நிலையில் விநியோகஸ்தராகவும் மாறியிருக்கிறார் இசைஞானி, செங்காத்து பூமியிலே படம் மூலம். 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா போன்ற படங்களின் கதை வசனகர்த்தாவான ரத்னகுமார் இயக்கும் படம் இது. ராஜாவிடம் நீங்கள்தான் இந்தப் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக வந்து நின்றாராம் ரத்னகுமார். படத்தின் கதையைக் கேட்டதும், 'போய் 10 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு வாருங்கள். நீங்கள் சொன்ன கதை இந்தப் படத்திலிருந்தால் இசையை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறியிருக்கிறார் இசைஞானி. 

10 நாட்களில் எடுத்தவற்றைப் பார்த்ததும் திருப்தியடைந்த ராஜா, இசையமைக்க ஒப்புக் கொண்டாராம். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டாராம். 

 


 

இந்தப் பட விநியோகத்துக்கென்றே இளையராஜா ஒரு புதிய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். பெயர் சுவாமி கிரியேஷன்ஸ்!

 



"நல்ல சினிமாவை உற்சாகப்படுத்தவே இந்த முயற்சி" என்று ரத்தினச் சுருக்கமாக விளக்கமும் தந்துள்ளார் ராஜா.

துபாயில் உலகின் உயரமான ஹோட்டல் திறப்பு: ஒரு டீ ரூ.4,557

துபாய்: உலகிலேயே உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 442 மீ உயரத்தில் இருக்கும் இது தான் உலகின் உயரமான உணவகம் ஆகும்.

இந்த உயரமான உணவகத்தின் பெயர் அட்மாஸ்பியர். 828 மீட்டர் உயரம் உள்ள பர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் அமைந்திருக்கும் இது நேற்று துவங்கப்பட்டது.

உயரமான இடத்தில் சாப்பிட விரும்புவோர் இந்த உணவகத்திற்குச் செல்லலாம். ஆனால் உயரத்திற்கேற்ப விலையும் சற்று அதிகம் தான்.

இந்த உணவகத்திற்கென பிரத்யேக லிப்ட் உள்ளது. இங்கு சுமார் 210 பேர் அமர்ந்து உண்ணலாம். இங்கிருந்து அமீரகத்தின் வானவிளிம்பைக் காணலாம். 

இந்த சொகுசு உணவகத்தில் பிரைவேட் டைனிங் பகுதியில் அமர்ந்து உணவருந்த விரும்புபவர்கள் நபர் ஒருவருக்கு ரூ. 8 ஆயிரத்து 62. 65 கொடுக்க வேண்டும். மேலும், மதிய வேளையில் டீ குடிக்க ரூ. 4 ஆயிரத்து 557. 75 பைசா கொடுக்க வேண்டும். 

இது தவிர பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனி வேண்டுவோர் தலைக்கு ரூ. 2 ஆயிரத்து 481.69 பைசா கொடுத்தால் போதும்.

Sunday, January 23, 2011


ÚTÖ¦ÚVÖ ÙNÖy| U£‹‰ ÙLÖ|†R p½‰ ÚSW†‡¥
2 YV‰ hZ‹ÛR UŸU NÖ°
~ÙT£•“ŠŸ A£ÚL TWTW“

 



~ÙT£•“ŠŸ, ^].24-

~ÙT£•“ŠŸ A£ÚL TPÛT›¥ ÚTÖ¦ÚVÖ ÙNÖy| U£‹‰ ÙLÖ|eLTyP p½‰ ÚSW†‡¥ 2 YV‰ hZ‹ÛR UVjf «µ‹‰ C\‹R‰.

ÚTÖ¦ÚVÖ ÙNÖy| U£‹‰

LÖtq“W• UÖYyP• ~ÙT£•“ŠŸ A|†R TPÛT GÁ\ F¡¥ ÙNÖy| U£‹‰ YZjh• ˜LÖ•L· SP‹R]. Ajh ÙT¡VÖŸSLŸ Th‡›¥ E·[ TÖ¥YÖz›¥ AÛU‹R ˜LÖ–¼h ATh‡ ÙTÖ‰UeL· ‡W[ÖL Y‹‡£‹‰ RjL[‰ hZ‹ÛRLºeh ÚTÖ¦ÚVÖ ÙNÖy| U£‹ÛR YZjf]Ÿ.

AÚR ÙT¡VÖŸSLŸ Th‡ 5-Y‰ ÙR£ÛY ÚNŸ‹RYŸ A£·, i¦†ÙRÖ³XÖ¸. CYW‰ UÛ]« R]Xyr–. CYŸLºeh Ú^ÖÍYÖ (YV‰ 2) GÁ\ ULÁ C£‹RÖÁ. CehZ‹ÛReh• ÚS¼¿ ÚTÖ¦ÚVÖ ÙNÖy| U£‹‰ ÙLÖ|eLTyP‰.

UVeL•-NÖ°

®yz¼h ‡£•‘V p½‰ ÚSW†‡¥ hZ‹ÛR UVeL• AÛP‹R‰. EPÚ] hZ‹ÛRÛV TPÛT›¥ E·[ RÂVÖŸ U£†‰YUÛ]eh ÙLց| ÙNÁ\ÖŸL·. Ajh T¡ÚNÖ‡†‰ TÖŸ†R PÖePŸL·, hZ‹ÛR C\‹‰ «yPRÖL ÙR¡«†R]Ÿ.

‘Á]Ÿ hZ‹ÛRÛV T¡ÚNÖRÛ]eLÖL hÚWÖ•ÚTyÛP AWr BÍT†‡¡eh AĐ‘ ÛY†R]Ÿ. CÛR†ÙRÖPŸ‹‰ ATh‡ ˜LÖ–¥ ÙNÖy| U£‹‰ YZjhY‰ Œ¿†RTyP‰.

BÍT†‡¡›¥ ˜¼¿ÛL

ATh‡ ÙTÖ‰UeL· ÙNÖy| U£‹‰ YZjLTyP RjL· hZ‹ÛRLÛ[ ŠefeÙLց| TPÛT›¥ E·[ RÂVÖŸ U£†‰Y UÛ]›Á ˜Á“ ‡WP]Ÿ.

~ÙT£•“ŠŸ ‰ÛQ s‘W| TÖXr‘WU‚V•, ÚTÖ§Í CÁÍÙTePŸ N°‹RŸWÖ^Á U¼¿• ÚTÖ§NÖŸ «ÛW‹‰ Y‹‰ NUÖRÖ]• ÙNšR]Ÿ.

ÚU¨• TPÛT Th‡›¥ C£‹‰ 100-eh• A‡LUÖ] hZ‹ÛRLÛ[ U£†‰Y T¡ÚNÖRÛ]eLÖL hÚWÖ•ÚTyÛP AWr U£†‰YUÛ]eh ÙLց| Y‹R]Ÿ. Ajh PÖePŸL· A‹R hZ‹ÛRLÛ[ ÚNÖRÛ] ÙNš‰ TÖŸ†‰ «y| S¥X EP¥SX†‰PÁ C£TRÖL ÙR¡«†R]Ÿ. ARÁ ‘Á]ÚW hZ‹ÛRLÛ[ ®yz¼h Œ•U‡VÖL AÛZ†‰ ÙNÁ\]Ÿ.

C‹R N•TY†‡]Ö¥ TPÛT U¼¿• hÚWÖ•ÚTyÛP U£†‰YUÛ]›¥ ÙT£• TWTW“ H¼TyP‰. hÚWÖ•ÚTyÛP U£†‰YUÛ] Y[ÖL†‡¥ hZ‹ÛRLºeh ÙNÖy| U£‹‰ ÚTÖPT|Y‰ Œ¿†RTyP‰.

«NÖWÛQeh E†RW°

N•TY• h½†‰ LÖtq“W• UÖYyP LÙXePŸ BpÐNÖyPŸÈ i¿ÛL›¥, ``ÚTÖ¦ÚVÖ ÙNÖy| U£‹‰ YZjLTyP U¼\ hZ‹ÛRL· VÖ£eh• G‹R TÖ‡“• C¥ÛX. G]ÚY ÙNÖy| U£‹‰ ÙLÖ|eLTyPRÖ¥ RÖÁ hZ‹ÛR C\‹RRÖL L£R YÖš‘¥ÛX. LÖWQ• GÁ]? GÁTÛR LP½V U£†‰Y hµ«]Ÿ N•TY CP†‡¼h «ÛW‹‰·[]Ÿ' GÁ¿ ÙR¡«†RÖŸ.

CRÛ] ÙRÖPŸ‹‰ i|R¥ ÚTÖ§Í s‘W| TÖÍLŸ, ~ÙT£•“ŠŸ ‰ÛQ s‘W| TÖXr‘WU‚V•, U£†‰Y ‰ÛQ CVeh]Ÿ WÖ^ÚNLŸ, UÖYyP Y£YÖš A¨YXŸ pYWÖr, RÖp¥RÖŸ N•T† BfÚVÖŸ «ÛW‹‰ Y‹‰ «NÖWÛQ SP†‡ Y£f\ÖŸL·.


Google Custom Search