துபாய்: மேற்கு இந்தியத் தீவின் சிறந்த கிரிக்கெட் வீரரான லாரா, நவீன யுகத்தின் பிராட்மேன் சச்சின் டெண்டுல்கர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஆனால் அவர் பிராட்மேனையும், சச்சினையும் ஒப்பிட்டுப் பார்க்க மறுத்துவிட்டார்.இது குறித்து லாரா கூறியதாவது,
பிராட்மேனுக்கும், சச்சினுக்கும் இடையில் எந்தவித போட்டியும் இல்லை என்றே நினைக்கிறேன். இருவருமே தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் ஆவர்.
தன்னால் என்ன முடியும் என்பதை சச்சின் உலகிற்கு காட்டிவிட்டார். அவர் இந்த விளையாட்டில் இத்தனை காலமாக இருப்பது பாராட்டிற்குரியது.
அவர் விளையாடும்போதும் நீண்ட நேரம் களத்தில் இருப்பார். அவர் அனைத்து சாதனைகளையும் முறியடித்துக் கொண்டிருக்கிறார். அவர் 16 வயதில் விளையாடத் துவங்கி தற்போது 37 வயதாகியும் இன்னும் சிறப்பாக விளையாடுவதை நான் வெகுவாக பாராட்டுகிறேன் என்றார்.
ஒரு காலத்தில் சச்சினையும், லாராவையும் கிரிக்கெட் உலகம் ஒப்பிட்டுப் பார்த்து வந்தது. இந்தப் போட்டியில் லாராவை தனது ஸ்டைலாலும், ஸ்திரமான ஆட்டத்தாலும் டெண்டுல்கர் ஓரம் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment