Wednesday, January 12, 2011

ஜன. 14 முதல் பிரகாஷ் ராஜின் பயணம் பட டிரெய்லர்

ஜனவரி 14ம் தேதி பிரகாஷ் ராஜின் பயணம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. பிப்ரவரியில் படம் திரைக்கு வருகிறது.

பிரகாஷ் ராஜின் தயாரிப்பு பயணம். இதை ராதாமோகன் இயக்கியுள்ளார். விமானக்  கடத்தல் [^]  குறித்த கதை இது. படத்தில் நாகார்ஜூனா ஹீரோவாக நடித்துள்ளார். கமாண்டோ வீரராக அவர் வருகிறார். கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.

இப்படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், ஜனவரி 14ம் தேதி  டிரெய்லரை வெளியிடுகிறோம். பொங்கலுக்கு திரைக்கு வரும் படங்களுடன் எங்களது டிரெய்லர் வெளியிடப்படும். பிப்ரவரி 4ம் தேதி படம் திரைக்கு வருகிறது என்றார்.

படம் சிறப்பாக வந்திருப்பதாக டிரெய்லர் குறித்து அறிந்தவர்கள் கூறுகிறார்கள். வித்தியாசமான திரைக்கதையுடன் இப்படத்தின் கதையை அமைத்துள்ளாராம் ராதாமோகன் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

Google Custom Search