Sunday, January 9, 2011

1811-ம் ஆண்டு கடலில் மூழ்கிய அமெரிக்க போர்க்கப்பல் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் கான்கடி கட் பகுதியை சேர்ந்தவர்கள் சார்லஸ் பப்பும், கிரயிக்கார்கர். இவர்கள் இருவரும் நீரில் மூழ்கி கடல்வாழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் “ரோத்” தீவு பகுதியில் கடலில் மூழ்கி கிடந்த ஒரு கப்பலின் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தனர். ஆனால் அதுகுறித்து அவர்கள் யாரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை.   அந்த கப்பல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இறுதியில் அது அமெரிக்க போர்க்கப்பல் என தெரியவந்தது.
 
கடந்த 1811-ம் ஆண்டு அமெரிக்காவுக்கம், இங்கிலாந்துக்கும் இடையே போர் நடந்தது. அப்போது அமெரிக்க கப்பற்படையை கமாண்டர் ஆலிவர் ஹஷார்ட் என்பவர் வழிநடத்தி சென்றார். இந்த போரில் கடந்த 1813-ம் ஆண்டு அமெரிக்கா வெற்றி பெற்றது.  
 
 அப்போது நடந்த போரின்போது கடலில் மூழ்கிய அமெரிக்க கப்பலின் ஒருபகுதிதான் இது என தெரியவந்துள்ளது. இக்கப்பல் மூழ்கி 200 வருடம் ஆகிறது. இதன் ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கப்பலின் உடைந்த பாகங்களில் 42 இஞ்ச் நீள பீரங்கிகள், ஒரு நங்கூரம் மற்றும் மெட்டல் பகுதிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Google Custom Search