Tuesday, January 11, 2011

2010-ம் ஆண்டின் மக்கள் விரும்பிய ஆண்-ரித்திக், பெண்-கத்ரீனா

மும்பை:  2010-ம் ஆண்டின் மக்கள் அதிகம் விரும்பிய ஆணாக ரித்திக் ரோஷனும், பெண்ணாக கத்ரீனா கைபும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முன்னணி நாளிதழ் நடத்திய கணக்கெடுப்பில் இவர்கள் இருவரும் 49 பேரை பின்னுக்குத் தள்ளி, முன்னுக்கு வந்துள்ளனர்.

ஸ்டைல் மன்னன் சல்மான் கான் 2வது இடத்தையும், இளம் நாயகன் ரன்பீர் கபூர் 3 வது இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும், ஷாஹித் கபூர் 4வது இடத்தையும், ஜான் ஆப்ரகாம் 5 வது இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களை ஷாருக் கான், அக்சய் குமார், அர்ஜுன் ராம்பல், இம்ரான் கான் மற்றும் சைப் அலி கான் பிடித்துள்ளனர்.

மிகவும் விரும்பப்படும் பெண்ணாக கத்ரீனா தேர்வாகியுள்ளார். அவர் கடந்த ஆண்டும் இந்தப் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 





இரண்டாவது இடத்தை ஐஸ்வர்யா ராயும், அவரைத் தொடர்ந்து பிரியங்கா, தீபிகா படுகோனே, கரீனா கபூர் வந்துள்ளனர். சிரிப்பழகி ஜெனிலியா, சோனம் கபூர், பிபாஷா பாசு, கங்கனா ரனவ்த், மிஸ் எர்த் நிக்கோல் பாரியா ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆக, ஐஸ்வர்யா ராய் படிப்படியாக தனது செல்வாக்கை ஒவ்வொரு துறையாக இழந்து வருகிறார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

Google Custom Search