Saturday, January 15, 2011

அட்வகேட் ஜெனரல் ராமன் மகள் கீதாஞ்சலியை ஜூலையில் மணக்கிறார் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவனுக்கும் அவரது காதலி கீதாஞ்சலிக்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது.

இதனை தனது பிஆர்ஓ நிகில் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

நடிகை சோனியா அகர்வாலை பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த செல்வராகவன், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

இந்த விவாகரத்து நடந்த சில மாதங்களுக்குள் மீண்டும் செல்வராகவனுக்கு காதல் பூத்து விட்டது, கீதாஞ்சலி என்ற பெண்ணுடன். தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் இவர்.

செல்வராகவன் தற்போது தனது தம்பி தனுஷ் - ஆன்ட்ரியாவை வைத்து இயக்கிவரும் இரண்டாம் உலகம் படத்தின் உருவாக்கத்தின்போதுதான் கீதாஞ்சலியுடன் காதலில் விழுந்தாராம். இந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார் கீதாஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இன்று நான் இரு மகிழ்ச்சியான விஷயங்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மீண்டும் ஒரு மாறுதல். கீதாஞ்சலியை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறேன். ஜூனில் திருமணம் இருக்கும். திருமணத் தேதி முடிவானதும் அறிவிக்கிறேன்.

அடுத்தது, நான் இயக்கும் இரண்டாம் உலகம் படம் தொடர்பானது. இந்தப் படம் 70 சதவீதம் முடிந்துவிட்டது. விரைவில் இறுதிக்கட்டப் பணிகள் ஆரம்பமாகும்" என்று கூறியுள்ளார்.

விரைவில் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் நிச்சயதார்த்தம் எளிமையாக நடக்கவிருக்கிறது.

No comments:

Post a Comment

Google Custom Search